நாம் தினமும் ஓடி ஓடி உழைத்த பணத்தை நமது பிள்ளைகளுக்கு என சேமித்து வைப்போம். ஆனால் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் யாரேனும் ஒருவர் வந்து உதவி என கேட்கும் பொழுது அவர்களை நம்பி அந்த பணத்தை நாம் கடனாக கொடுத்து விடுவோம். தெரிந்தவர்கள் தானே.. உறவினர்கள் தானே.. என்று அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நகையையோ பணத்தையோ நாம் கடனாக கொடுத்திருப்போம். ஆனால் அவர்கள் சொன்ன காலத்திற்குள் அந்த பணத்தையும் நகையையோ நம்மிடம் திரும்ப கொடுக்க மாட்டார் அல்லது கொடுக்கும் சூழ்நிலை அவருக்கு ஏற்படாமல் கூட இருந்திருக்கலாம்.
இன்னும் சிலர் நம்மிடம் வாங்கிய பணத்தை தராமல் ஏமாற்றி கூட இருக்கலாம். இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் நாம் நம்மிடம் கடன் வாங்கியவர் நம் பணத்தை திருப்பிக் கொண்டு வந்து நம்மிடம் கொடுக்க வேண்டும் எனவும் கொடுக்கக்கூடிய சூழ்நிலையை அவர்களுக்கு கடவுள் ஏற்படுத்த வேண்டும் எனவும் முருகர் வழிபாடு செய்வதன் மூலம் இந்த காரியம் ஆனது வெற்றியடையும்.
பொதுவாக ஒரு பரிகாரம் செய்கிறோம் என்றால் அந்த பரிகாரத்தினை பிரம்ம முகூர்த்தத்திலோ அல்லது சூரிய உதயத்திற்கு முன்பாகவோ அதனை செய்வது சிறப்பு. இந்த இரண்டு நேரத்திலும் செய்ய முடியாதவர்கள் எப்பொழுது நமக்கு நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது முழு மனதுடன் செய்தால் போதும்.
நாம் தினமும் எவ்வாறு பூஜை அறையில் சாமிக்கு அலங்காரம் செய்து விளக்கினை ஏற்றி வழிபடுவோமோ அதே மாதிரி செய்து பூஜை அறையில் அமர்ந்து ஒரு வெற்றிலையில் மஞ்சள் தூளை கரைத்து அதனை தீக்குச்சியால் தொட்டு அந்த வெற்றிலையில் நமக்கு யார் பணம் தர வேண்டுமோ அவரது பெயர் மற்றும் எவ்வளவு தொகை அல்லது நகை, நிலம் போன்று என்ன நமக்கு தர வேண்டுமோ அதனையும் எழுதி விளக்கிற்கு முன்பு வைத்து முருகனை நினைத்தோ அல்லது நமது குலதெய்வத்தை நினைத்தோ முழு மனதுடன் வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த வழிபாடு நிறைவு அடைந்த பிறகு அந்த வெற்றிலை அந்த ஒரு நாள் இரவு வரையிலும் பூஜை அறையிலேயே இருக்க வேண்டும். மறுநாள் காலை அந்த வெற்றிலையை சுருட்டி நூல் கொண்டு கட்டி அதனை ஓடும் நீரில் விட்டு விட வேண்டும். ஓடும் நீர் நிலையங்கள் இல்லை என்றால் கிணறு, ஏரி, குளம் போன்றவைகளிலும் விட்டுவிடலாம். அதுவும் இல்லை என்றால் நமது கால் படாத இடத்தில் அதனை போட்டு விட வேண்டும். ஆனால் கழிவுநீர் போன்றவைகளில் அதனை போட்டு விடக்கூடாது.
இந்த பரிகாரத்தினை முழு மனதுடனும், முழு நம்பிக்கையுடனும் செய்தால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். உங்கள் கையை விட்டு சென்ற பணம், நகை, வீடு, சொத்து போன்ற எதுவாக இருந்தாலும் உங்கள் கைத்தேடி வரும்.