ADMK TVK: திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்த விஜய் தற்போது அனைவராலும் பரவலாக பேசப்பட்டு வருகிறார். தன்னுடைய பிரச்சாரம், மாநாடு என அனைத்திலும் திமுக தான் எதிரி என்று கூறி வரும் இவர், அதிமுகவை வஞ்சிக்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அதிமுகவை பகைத்து கொள்ளாமல் கவனமாக செயல்படுகிறார் என்பது ஒரு தரப்பினரின் கருத்து.
இவரின் மௌனம் இவர் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த ராஜேந்திர பாலாஜி விஜய்யை அதிமுகவில் சேரும் படி நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார். இது இவர்களின் கூட்டணிக்கு அடித்தளமாக விளங்குகிறது.
இதனால் தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் எந்த முடிவை எடுப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தேவைப்படும் நேரத்தில் கூட்டணி அமைக்கவும், தனித்து போட்டியிடவும் விஜய் திட்டம் தீட்டி வருகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணியே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமைகிறது.