சிம்புவின் அடுத்தப் படம்!! சூட்டிங் ஸ்டார்ட்!! கௌதம் மேனன் இயக்கம்!!

0
226
Simbu's next film !! Shooting starts !! Gautham Menon movement !!
Simbu's next film !! Shooting starts !! Gautham Menon movement !!

சிம்புவின் அடுத்தப் படம்!! சூட்டிங் ஸ்டார்ட்!! கௌதம் மேனன் இயக்கம்!!

சிம்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்த படம் வெளியாகி பெறும் வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து சிம்பு பல படங்களில் கையெழுத்திட்டுள்ளார் என தெரிகிறது. இதில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான மாநாடு படத்தின் படபிடிப்பானது வெற்றிகரமாக முடிந்தது. மங்காத்தா போன்ற வெற்றி படங்களை இயக்கிய  வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் இருந்தால் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இம்மாத இறுதிக்குள் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என தெரிகிறது.

மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சிம்பு அடுத்த படத்தில் களமிறங்கி விட்டார் அவர் கௌதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் தற்போதைய தகவல் என்னவென்றால் இந்தப்படத்தின் போட்டோ ஷூட் ஆனது இன்று நடத்தப்பட்டது மேலும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கௌதம் மேனன் ஏற்கனவே சிம்புவோடு இணைந்து விண்ணை தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா என்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளதால் இந்த படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்புகள் குவிந்து வருகிறது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப் புயல்ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வந்த போதிலும் கௌதம் மேனன் திரௌபதி பட இயக்குனர் இயக்கும் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சிம்பு தனது மாநாடு படத்தின் வெளியீட்டிற்காக காத்து கொண்டிருக்கிறார்.

Previous articleகுக் வித் கோமாளி தர்ஷா குப்தாவின் திருமண புகைப்படம் வைரல்!! அதிர்ந்து போன ரசிகர்கள்!!
Next articleசுக்கு தினமும் எடுத்துக் கொள்வதால் இவ்ளோ நன்மைகளா!! கொஞ்சம் இதையும் ட்ரை பண்ணி பாருங்க!!