இந்த வயதிலும் எவ்வளவு அழகு! ரசிகர்களை உச்சுக்கொட்ட வைக்கும் சிம்ரன்!

Photo of author

By Sakthi

இந்த வயதிலும் எவ்வளவு அழகு! ரசிகர்களை உச்சுக்கொட்ட வைக்கும் சிம்ரன்!

Sakthi

நோய் தொற்றின் இரண்டாவது அலை தற்சமயம் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. அதோடு பல உயிர்களை இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை பலி கொண்டு வருகின்றது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

அதோடு தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும் நாள்தோறும் ஏற்படுகின்ற இறப்பு செய்திகள் எல்லோரையும் கலங்கத்தான் வைக்கிறது.

இதன் காரணமாக, பல பிரபலங்களும் தங்களுடைய இல்லறத்தில் இருந்தவாறே தங்களுக்கு பிடித்த பல விஷயங்களை செய்து வருகிறார்கள். அதோடு பலர் நோய் தோற்று குறித்த விழிப்புணர்வு காணொளிகளை பகிர்ந்து வருகிறார்கள். அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

அந்த விதத்தில் தற்சமயம் நடிகை சிம்ரன் ஊர் அடங்கில் இருக்கும் போது தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். 40 வயதிலும் தன்னுடைய உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்ற அவரை ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.