சண்டியருக்கு வில்லியாக களமிறங்கும் நடிகை சிம்ரன்! எடுபடுமா சிம்ரனின் கர்ஜனை!

Photo of author

By Sakthi

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சிம்ரன். அந்த சமயத்தில் அவர் நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் திரைப்படம் தான்.முன்னணி நடிகர்களாக இருந்து வரும் அஜித், விஜய் போன்ற பல முக்கிய நடிகர்களுடன் நடித்து அதன் மூலமாக தமிழ் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் நடிகை சிம்ரன். அதோடு தன்னுடைய ஒல்லியான தேகத்தை வைத்து அவர் நடனம் ஆடும் ஸ்டைலை பார்த்து பலரும் சொக்கி போய்க் கிடந்து இருக்கிறார்கள்.

அவர் நடிப்பில் வெளிவந்த வாலி, பிரியமானவளே, ஏழுமலை, போன்ற திரைப்படங்கள் இன்றளவும் எல்லோராலும் விரும்பப்படும் ஒரு திரைப்படமாக இருந்துவருகிறது.
அதோடு அவர் நடிகர் விஜய் நடித்த யூத் திரைப்படத்தில் ஆல்தோட்ட பூபதி என்ற பாடலுக்கு ஆடிய குத்தாட்டத்தை இன்றளவும் அவருடைய ரசிகர்கள் யாரும் மறந்து விடவில்லை.

இந்த சூழ்நிலையில், வெகு நாட்களாக தமிழ் சினிமாவின் தோன்றாமல் இருந்த அவர் தற்போது ரீஎன்ட்ரி மூலமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். அதோடு அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிகவும் அற்புதமாக நடித்து கொடுத்து ரசிகர்களின் கைத்தட்டல் வாங்குவதில் வல்லவராக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், நடிகர் கார்த்திக்கின் இரட்டை வேடத்தில் உருவாகி வரும் சர்ரதார் என்ற திரைப்படத்தில் 45 வயது சிம்ரன் வில்லியாக நடிக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இரும்புத்திரை, ஹீரோ போன்ற திரைப்படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

Karthi tears up at the funeral of his fan in Ulundurpet

இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் கர்ணன் திரைப்பட நடிகை பிரதிக்ஷா விஜயன் நடித்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. இதனை தவிர்த்து முனீஸ்காந்த் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் வில்லியாக சிம்ரன் களமிறங்கியிருக்கிறார்.

இதற்கு முன்னரே சீமராஜா திரைப்படத்தில் வில்லியாக அவர் நடித்து இருக்கின்றார். அதனை கவனித்த இந்த திரைப்படத்தின் இயக்குனர் இந்த திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தத் திரைப்படத்திற்காக 2 கோடி ரூபாய் செலவிட்டு சிறை போன்ற படப்பிடிப்பு தளத்தை உருவாக்கி இருக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கார்த்திக்கின் வயதான தோற்றத்தில் இந்த திரைப்படத்தின் முதல் பார்வை வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சிம்ரனின் வில்லி கதாபாத்திரம் கார்த்திக்கின் கூட்டணியில் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் எல்லோரும் பார்க்க வேண்டும்.

சிம்ரன் பேட்ட திரைப்படத்திற்குப் பின்னர் ரீஎண்ட்ரி கொடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். பிரசாந்துடன் அந்தாதுன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.