Singer Suchitra: வில்லங்கத்தை கிளப்பிய பாடகி சுசித்ரா.. கோபத்தில் நடிகை த்ரிஷா!

Photo of author

By Priya

Singer Suchitra: தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவரின் குரலுக்க பலரும் ரசிகர்களாக உள்ளனர். இவர் ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்தார். அதன்பின்பு, பல திரைப்படங்களதில் நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் அதிக பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகியாக இருந்தார்.

இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் துணை கதாப்பாத்திர நடிகர் கார்த்தியை காதலித்து திருமணம் செய்துக்காெண்டார். அதன் பின்னர் இவரும், இவரின் கணவரும் பிரிந்தனர் இதற்கு காரணம் ‘சுசித்ரா லீக்ஸ்’ (Suchi Leaks) என்ற பெயரில் நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது தமிழ் சினிமாவில் உள்ள அனைவருக்கும் இது பரபரப்பை கிளப்பியது. இதில் தனுஷ் முதல் த்ரிஷா, அனிரூத், ஆன்ட்ரியா, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் என அனைவரின் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்தார்.

கிட்டத்தட்ட நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இது குறித்து பேசியுள்ளார் சுசித்ரா. இதில் தன் கணவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும், நடிகை த்ரிஷா தான் அவரின் தனிப்பட்ட புகைப்படங்களை கொடுத்தார் என்றும், நடிகர் தனுஷ் மற்றும் அவரின் மனைவி இருவரும் மகா கேடி என்றும் அனைவரையும் விளாசியுள்ளார். இது மீண்டும் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Singer Suchitra

பாடகி சுசித்ரா பேசும் போது, இதனை லீக் செய்தது தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்தியும், நடிகர் தனுஷ் தான் என்று கூறியுள்ளார். மேலும் த்ரிஷா தான் அவரின் தனிப்பட்ட புகைப்படங்களை கொடுத்துள்ளார் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதற்கு நடிகை த்ரிஷா பதிலடி கொடுக்கும் விதமாக, நான் என் சமூக வலைதளங்களில் மறைமுக இருந்தாலும், உண்மைக்கு மாறாக கருத்துக்களை இந்த உலகம் பேசுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க: Sakshi Agarwal: என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள்..!