சூப்பர் ஸ்டார் படம் பார்க்க தியேட்டருக்கு போய்..லத்தியால் அடி வாங்கிய சிறுத்தை சிவா!!

Photo of author

By Jeevitha

Cinema: கங்குவா படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியான நிலையில், இந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா தியேட்டரில் லத்தியால் அடி வாங்கியது பற்றி ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

சிறுத்தை சிவா இயக்கிய திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான கதை திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. மேலும் கங்குவா திரைப்படம் பற்றி ரசிகர்கள் படம் நன்றாக உள்ளது எனவும் மற்றொரு பக்கம் எதிர்பார்த்த அளவு இல்லை எனவும் கூறி வருகிறார்கள்.

இந்த கங்குவா திரைப்படம் 350 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் சிறுத்தை சிவா அடி வாங்கியது பற்றி பேசப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இந்த நிலையில் சிறுத்தை சிவா ரஜினிகாந்தை வைத்து “அண்ணாத்த” திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார்.

சிறுத்தை சிவாவின் சிறு வயதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் பார்க்க ஆவலுடன் முதல் நாள் வெளியாகும் போது “முதல் ஷோ” பார்க்க தியேட்டருக்கு சென்ற போது போலீசிடம் லத்தியால் அடி வாங்கினேன், அது இன்றும் என் மனதில் ஆழமாக உள்ளது என்று கங்குவா திரைப்படம் குறித்து பேட்டியில் அவர் கூறியுள்ளார். மேலும் இன்று வெளியான கங்குவா திரைப்படம் ரொம்ப நல்லா இருக்கு என அமெரிக்காவில் உள்ள அவரது நண்பர்கள் தொலைபேசியில்  கூறியுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.