சிவாஜி கணேசன் நடித்த 200வது திரைப்படம்!! தெய்வமகன் திரிசூலமாக மாறிய கதை!!
மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் 200வது திரைப்படமாக உருவாகி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரிசூலம் திரைப்படம் கன்னடத்தில் வெளியான சங்கர் குரு திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இருப்பினும் திரிசூலம் திரைப்படம் கன்னடத்தில் வெளியான சங்கர் குரு திரைப்படத்தை விட மாபெரும் வெற்றி பெற்றது.
கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் அவர்கள் பிரபல கதையாசிரியர் உதய் சங்கர் அவர்களை அழைத்து தமிழில் நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான தெய்வமகன் திரைப்படம் போலவே எனக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் அதற்கான கதையை தயார் செய் என்று கூறினார்.
இதையடுத்து கதையாசிரியர் உதய் சங்கர் அவர்களும் தெய்வமகன் திரைப்படத்தை பார்த்து அதன் பின்னர் உதய் சங்கர் உருவாக்கிய கதைதான் சங்கர் குரு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் நடிகர் ராஜ்குமார் அவர்கள் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் என மூன்று கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பார்.
இந்த திரைப்படத்தில் கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத சூழ்நிலை காரணமாக கணவன் மற்றும் மனைவி இருவரும் பிரிந்து விடுவார்கள். அதன் பின்னர். மனைவிக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றது.
இதையடுத்து ஒரு குழந்தை அம்மாவுடனும் மற்றொரு குழந்தை வேறு ஒரு இடத்திலும் வாழ வேண்டிய கட்டாயம். பின்னர் கணவன் ஒரு இடத்திலும், மனைவி மற்றும் ஒரு குழந்தை ஒரு இடத்திலும், இன்னொரு குழந்தை வேறு ஒரு இடத்திலும் வாழ்ந்து வரும் நிலையில் இவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பது தான் சங்கர் குரு திரைப்படம் ஆகும். சங்கர் குரு திரைப்படத்தை இயக்குநர் சோம சேகர் என்பவர் இயக்கியிருந்தார்.
சங்கர் குரு திரைப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து இந்த திரைப்படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் சங்கர் குரு திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு திரிசூலம் என்ற பெயரில் வெளியானது.
திரிசூலம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் ஏன் இலங்கையில் கூட திரிசூலம் திரைப்படம் 200க்கும் மேற்பட்ட நாட்கள் ஓடியது. இந்த திரிசூலம் திரைப்படத்தை இயக்குநர் கே விஜயன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் தயாரித்திருந்தார்.
ரீமேக் என்றால் பலவிதமான மாற்றங்களை வைத்து தான் திரைப்படம் எடுப்பார்கள். ஆனால் இங்கு இயக்குநர் கே விஜயன் அவர்கள் ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் செய்து சங்கர் குரு திரைப்படத்தை அப்படியே தமிழில் திரிசூலம் என்ற பெயரில் இயக்கினார்.
இயக்குநர் கே விஜயன் செய்த மாற்றம் என்னவென்றால் சங்கர் குரு திரைப்படத்தில் ராஜ்குமார் அவர்கள் சைக்கிளில் வருவது போன்ற ஒரு காட்சியை திரிசூலம் திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் ஸ்கூட்டரில் வருவது போல வைத்திருப்பார். அதன் பின்னர் இயக்குநர் கே விஜயன் அவர்கள் சங்கர் குரு திரைப்படத்தில் இருக்கும் அனைத்து காட்சிகளையும் அப்படியே திரிசூலம் திரைப்படத்தில் வைத்திருப்பார்.
சங்கர் குரு திரைப்படம் கன்னடத்தில் பெற்ற வெற்றியை விட திரிசூலம் திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதற்கு காரணம் சங்கர் குரு திரைப்படத்தில் நடித்த நடிகர் ராஜ்குமார் அவர்கள் மூன்று கதாப்பாத்திரங்களிலும் ஒரே மாதிரி வித்தியாசம் இல்லாமல் நடித்திருப்பார். ஆனால் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழில் மூன்று கதாப்பாத்திரங்களிலும் வித்தியாசமாக நடித்திருப்பார். மூன்று கதாப்பாத்திரங்களுக்கும் வித்தியாசத்தை காட்டி சிறப்பாக நடித்திருந்ததால் திரிசூலம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.