சிவாஜி அடிக்கும் காட்சிகளில் துணை நடிகர்கள் நடிகைகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் காட்சி சரியாக வர வேண்டும் என்பதற்காக உண்மையாகவே அடித்து விடுவாராம் சிவாஜி. அதனால் நடிப்பதற்கு முன்பு இப்படி எல்லாம் இருந்து கொள்ளுங்கள் என்று சொல்லுவார்.
இந்த மாதிரி காட்சிகள் அமைந்ததால்தான் அந்த காலத்தில் படம் மிகவும் தத்துரூபமாக வந்திருக்கக்கூடும். அன்றைய காலத்தில் சினிமா நடிகைகளும் நடிகர்களும் இந்த மாதிரி தான் மக்களுக்கு பொழுது போக்கை தந்திருக்கிறார்கள். அப்படி என்னதான் மற்ற நடிகைகள் நடிகர்கள் உஷாராக இருந்தாலும், அதையும் மீறி அடிகள் விழ தான் செய்கிறது. அதை பற்றிய சம்பவம் தான் இன்றைக்கு பார்க்கப் போகிறோம்.
விளையாட்டுப் பிள்ளை திரைப்படம். இந்த படம் ஏ பி நாகராஜன் அவர்களின் இயக்கத்தில் ஜெமினி ஸ்டுடியோவால் 1970 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் சிவாஜி பத்மினி காஞ்சனா ஆகியோர் நடித்திருப்பார்கள். இதில் ஒரு மாட்டு வண்டி வீரனுக்கும் ஒரு சாதாரண பெண்மணிக்கும் வந்த காதல் எப்படி இருந்தது என்பதை பற்றி தான் இந்த கதை. இந்த படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது குறிப்பிடத்தக்கது.
இந்த கதையின் பொழுது சிவாஜி பத்மினியை சாதாரணமாக அடிக்க வேண்டும்.
ஆனால் சிவாஜி தத்துவபமாக இருக்க வேண்டும் என்று நினைத்து நடிப்பார். அப்படி அந்த காட்சியில் அடித்த அடியில் பத்மினியின் கம்மல் அடுத்த அறையில் போய் விழுந்து இருக்கிறது.
ஷாட் ஓகே. அனைவருக்கும் திருப்தி. அடுத்த ஷாட்க்கு பத்மினியை தேடும் பொழுது அவர் ஒரு அறையில் அழுது கொண்டிருந்தாராம்.
பின் ஏ பி நாகராஜன் அடுத்த சாட்டருக்கு வர சொல்லி பத்மினியும் போய் கேட்ட பொழுது, அவர் அடித்த அடியில் என்னால் வலி தாங்க முடியவில்லை. அழுவதற்காகவது கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டு, அழுத பிறகு படபடப்பு தொடங்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
விளையாட்டு பிள்ளை படத்தில் இப்பொழுது நீங்கள் பார்த்தீர்கள் என்றாலும், அந்த கம்மல் அடுத்த அறையில் விழுந்தது உங்களால் பார்க்க முடியும்