சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றவில்லை! இயக்குநர் மடோன அஷ்வின் பேட்டி!!

Photo of author

By Sakthi

சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றவில்லை! இயக்குநர் மடோன அஷ்வின் பேட்டி!!

Sakthi

சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றவில்லை! இயக்குநர் மடோன அஷ்வின் பேட்டி!

 

மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றப்படவில்லை என்று மாவீரன் திரைப்படத்தின் இயக்குநர் மடோனா அஷ்வின் கூறியுள்ளார்.

 

இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிக்கும் திரைப்படம் மாவீரன். இந்த திரைப்படத்தில நடிகை சரிதா, நடிகர் சுனில், நடிகர் யோகி பாபு, இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில்  நடிக்கின்றனர். மாவீரன் படத்துக்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.

 

மாவீரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்த படத்திற்கு மாவீரடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதாவது ஜூன் 14ம் தேதி மாவீரன் படத்தின் இரண்டாவது சிங்கில் பாடல் வெளியானது. மாவீரன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் வரும் நிலையில் மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி வெளியாகிறது.

 

இந்த நிலையில் மாவீரன் படத்தின் இயக்குநர் மடோனா அஷ்வின் சமீபத்திய நேர்காணலில் “நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் படத்தில் நான் எழுதிய கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தார். அவருக்காக எந்த காட்சிகளும் மாற்றப்படவில்லை. அவரும் எந்த காட்சியையும் மாற்ற வேண்டும் என்று கூறவில்லை. மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நகைச்சுவை செய்திருக்கமாட்டார். அவரை சுற்றியுள்ள அனைவரும் நகைச்சுவை செய்திருப்பார்கள். ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சிறிய சிறிய ஆலோசனைகள் கொடுத்தார். அது படத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஸ்கிரிப்ட் பற்றி அறிவுள்ள ஆளாகததான் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இருந்தார்” என்று அவர் கூறியுள்ளார்.