சிக்ஸ் பேக்கில் சிவகார்த்திகேயன்… இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படம்!!

0
57

 

சிக்ஸ் பேக்கில் சிவகார்த்திகேயன்… இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படம்…

 

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சிக்ஸ் பேக் உடலுடன் இருப்பது போல புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராம் மற்றும் மற்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

 

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14ம் தேதி வெளியானது. மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவருடயை 21வது படமான எஸ்.கே21 படத்தில் நடித்து வருகிறார்.

 

எஸ்கே21 திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி அவர்கள் கதாநாயாகியாக நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவறம் சார்பாக நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தயாரிக்கின்றார். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் எஸ்.கே21 திரைப்படத்தில் இராணுவ வீரர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் எஸ்கே21 திரைப்படத்திற்காக புதிய கெட்டப்பில் நடித்து வருகிறார்.

 

ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தலைக்கு குல்லா அணிந்துதான் வெளியில் சென்று வருகிறார். மேலும் நல்ல உடல்கட்டுடன் இருக்கிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது எஸ்கே 21 திரைப்படத்தில் புதிய தோற்றத்தில் இருப்பார் என்று தெரிகிறது. இந்நிலையித் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சிக்ஸ் பேக் உடலுடன் இருப்பது போல புகைப்படம் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் மற்றும் மற்ற சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

 

இந்த புகைப்படத்திற்கு காப்பீட்டு உரிமை கோரி அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கிவிட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே21 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று பரவி வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் இருப்பது போன்ற புகைப்படம் எஸ்கே21 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.