லாக்டவுனில் சிவகார்த்திகேயன் செய்த செயல்! வைரல் வீடியோ!

Photo of author

By Hasini

லாக்டவுனில் சிவகார்த்திகேயன் செய்த செயல்! வைரல் வீடியோ!

Hasini

Sivakarthikeyan's action in Lockdown! Viral video!

லாக்டவுனில் சிவகார்த்திகேயன் செய்த செயல்! வைரல் வீடியோ!

கடந்த ஒரு வருட காலமாகவே உலகமே வீட்டில் முடங்கி விட்டது இந்த கொரோனா தொற்றின் காரணமாக, எனவே பலரும் தங்கள் வீட்டில் இருந்தே செய்யும் வேலைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

திரைபிரபலங்கள் கூட வீட்டில் இருந்து தங்களுக்கு பிடித்த மாதிரி வீட்டினை மாற்றுவது, தோட்டம் அமைப்பது போன்ற பல்வேறு வேளைகளில் தங்களை உட்படுத்திக் கொண்டிருள்ளனர். தோட்டத்தை பெரிய அளவில் தயார் செய்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை அந்த தோட்டத்தில் இருந்தே பறித்து பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்து உள்ளார். அந்த தோட்டத்தை வீடியோவில் படம்பிடித்து இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசும்போது, இதுதான் எனது காய்கறி தோட்டம். ஊரடங்குக்கு கொஞ்சம் முன்புதான் இந்த தோட்டத்தை தயார் செய்தேன். இப்போது இங்கிருந்துதான் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை பறித்து பயன்படுத்துகிறேன் இதை உங்களுக்கு காட்ட வேண்டும் என்றுதான் இந்த வீடியோ.

இந்த தோட்டத்தை இன்னும் முழுமையாக தயார் செய்ய வேண்டும் என்று ஆசை உள்ளது. அதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். அதெல்லாம் தயாரானதும் திரும்பவும் உங்களுக்கு காட்டுகிறேன். எல்லோரும் பத்திரமாக இருங்கள். சீக்கிரம் நமது வாழ்க்கையும் இந்த காய்கறி தோட்டம் போன்று செழிப்பாகி விடும் என்று மக்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் நம்பிக்கை ஊட்டும் விதமாக கூறியுள்ளார்.

இதை நாமும் முயற்சி செய்யலாமே? மனஅழுத்தத்தில் இருந்து வெளி வரலாம். மேலும் உற்சாகமாகவும் இருக்கும், முயற்சி செய்து பாருங்கள்.