தமிழ் சினிமாவில் காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். இருந்தாலும் இவர் நடிகர் சிவாஜி கணேசனுடன் நடித்த திரைப்படங்கள் மட்டுமே அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்திருக்கிறது. காரணம் சிவாஜி கணேசன் நடிப்புதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர்தான் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து நடிகர் சிவகுமார் வெற்றி அடைந்திருக்கிறார்.
சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சரஸ்வதி சபதம் இந்த திரைப்படத்தில் சாவித்திரி மற்றும் பத்மினி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் சிவக்குமார் மகாவிஷ்ணுவாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் வெற்றி அடைந்ததை சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசனின் நடிப்பு தான் காரணம் என்று புகழ்ந்தார்கள். ஆனால் சிவகுமார் நடித்த விஷ்ணு கதாபாத்திரமும் ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்று இருக்கிறது.
பழம்பெரும் இயக்குனர் ஏபி நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று சாதனை படைத்த ராஜராஜ சோழன் என்ற திரைப்படம். முழுக்க முழுக்க மன்னர் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கதாநாயகர் என்றால் அது சிவாஜிகணேசன் தான் ஆனாலும் அந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு மகனாக நடிகர் சிவகுமார் நடித்திருப்பார்.
அதேபோல தேவராஜ் மோகன் இயக்கத்தில் சிவ குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி இந்த திரைப்படம் தான் சிவக்குமார் வாழ்க்கையை மொத்தமாக மாற்றியது என்று கூட சொல்லலாம். ஏனென்றால் சிவகுமாருக்கு நூறாவது படமாக இது அமைந்தது. அதோடு மட்டுமில்லாமல் 100 நாட்களுக்கு மேல் இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.
தீபா மற்றும் சிவசந்திரன் போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சிவகுமார் ஒரு காலத்தில் குணசித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். அவருக்கு கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த திரைப்படம் என்றால் அது ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் தான். இந்த திரைப்படத்திற்கு பின்னர் இவர் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.