கடைசி பந்தில் சிக்சர்! அதிரடியாக வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி!!

0
103

கடைசி பந்தில் சிக்சர்! அதிரடியாக வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி!!

 

நேற்று அதாவது ஜூலை 10ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎல் இரண்டாம் குவாலிபையர் சுற்றில் இறுதிபந்து வரை சென்ற ஆட்டத்தில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை வென்று இறுதிப் போட்டிக்குள் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

 

நேற்று(ஜூலை10) நடைபெற்ற டிஎன் பிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றின் இரண்டாம் குவாலிபையர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

இதையடுத்து முதலில் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் அதிகபட்சமாக சிவம் சிங் அரைசதம் அடித்து 76 ரன்கள் சேர்த்தார். மேலும் பூபதி குமார் 41 ரன்கள் சேர்த்தார். நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் பந்துவீச்சில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகளையும், ல்கசய் ஜெயின் எஸ், பொய்யாமொழி, வாரியர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

 

186 ரன்கள் எடுத்தால் வெற்றி ஒன்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தனர். தொடக்க வீரர்கள் அருண் கார்த்திக் 26 ரன்களும், பி சுகேந்திரன் 22 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்க அதன் பிறகு களமிறங்கிய அஜிதேஷ் குருசுவாமி அதிரடியாக விளையாடினார். அவருடன் இணைந்த நித்திஷ் ராஜகோபால் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய அஜிதேஷ் குருசுவாமி அரைசதம் அடித்தார்.

 

கடைசி இரண்டு ஓவர்களில் அதாவது 12 பந்துகளில் 37 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் போட்டியின் 19வது ஓவரில் 5 சிக்சர்களை அடித்து 33 ரன்கள் சேர்த்த நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் வீரர்கள் போட்டியை கடைசி பந்துவரை எடுத்துச் சென்றனர்.

 

இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு மூன்று ரன்கள் என்ற நிலையில் இருந்தது. எனினும் ஆட்டம் கடைசிபந்து வரை சென்றது. கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் ரித்திக் ஈஸ்வரன் 6 அடித்து போட்டியை முடித்து வைத்தார்.

 

இறுதி ஓவர் வரை சென்ற இந்த ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி பெறுவதற்கு 73 ரன்களை சேர்த்த அஜிதேஷ் குருசுவாமி ஆட்டநாயகன் விருதை வென்றார். நாளை அதாவது ஜூலை 12ம் தேதி நடைபெறும் டிஎன்பிஎல் கிரிக்கெட்  இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியுடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி மோதவுள்ளது. இந்த போட்டி திரூநெல்வேலியில் நாளை மாலை 7.15 மணிக்கு தொடங்குகிறது.

 

Previous articleமழைக்காலக் கூட்டத் தொடரில் ஆளுநர் பிரச்சனை பேசப்படுமா? எம்பிக்கள் கூட்டம்!!  
Next articleநாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!