செங்கோட்டையன் திமுகவின் ஸ்லீப்பர் செல்லா.. ஒரே சந்திப்பில் வெளிவந்த உண்மை!! அதிருப்தியில் விஜய்!!

0
77
Sleeper Cella of Sengottaiyan DMK.. The truth came out in one meeting!! Dissatisfied Vijay!!
Sleeper Cella of Sengottaiyan DMK.. The truth came out in one meeting!! Dissatisfied Vijay!!

DMK TVK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகள் குறித்த பேச்சு வார்த்தையும் தொடங்கபட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் திராவிடக் கட்சிகளின் உள் வட்டாரத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது வருகின்றன. அதிலும் முக்கியமாக அதிமுகவில் தொடரும் பிளவுகள் அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம்.  அதிமுக கொங்கு மண்டலத்தில் வலிமையாக இருந்து வரும் சூழலில், அங்கு அதன் செல்வாக்கை அடியோடு சறுக்கும் வகையில் முக்கிய அமைச்சர்களின் விலகல் தொடர்ந்து வருகிறது.

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில், அதிமுக தலைமைக்கு எதிரானவர்களுடன் சேர்ந்ததால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார். இதன் பின்னர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கோட்டையன் மத்திய அமைச்சர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதால் அமித்ஷா சொல்லி தான் அவர் தவெகவில் இணைந்தார் என்று எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் விமர்சித்து வந்தனர்.

விஜய் பாஜகவை எதிரி என்று கூறியதால், செங்கோட்டையன் மூலம் விஜய்யை வீழ்த்த பாஜக முயற்சிக்கிறது என்ற கருத்தும் வலுப்பெற்றது. இதனை செங்கோட்டையன் அறவே மறுத்திருந்தார். இந்நிலையில் இது குறித்து, பாஜக மாநில தலைவர் நயினாரிடம் கேட்ட போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பார்த்து பேசி விட்டு தான் செங்கோட்டையன் தவெகவிற்கு சென்று இருக்கிறார்.

என்ன பேசிவிட்டு சென்றார் என்பது யாருக்கும் தெரியாது என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து செங்கோட்டையன் திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக தவெகவிற்கு சென்று இருக்கிறார் என்பதை நிரூபித்திருக்கிறது. தவெகவில் சேந்த பின் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அதிமுகவும், திமுகவும் ஒன்று தான் என்று கூறி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட போது திமுக அவரை கட்சியில் சேர்க்க பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஅண்ணாமலையின் இறுதி முடிவு.. டிசம்பரில் புதிய ரூட்!! பாஜகவிற்கு விழப் போகும் அடி!!
Next articleபாமக பிரச்சனையை டீல் செய்யும் டெல்லி மேலிடம்.. முடிவுக்கு வரும் தந்தை-மகன் மோதல்!!