இந்தியாவில் சற்றே அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

0
135

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கு முன்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கிலேயே இந்தியாவில் இந்த நோய்த்தொற்று ஊடுருவியது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டு வந்த பல்வேறு நடவடிக்கைகளையும் கடந்து இந்த நோய் பரவல் கடந்த 2020ஆம் வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் தீவிரமடையத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து அந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக அப்போது தடுப்பூசி உள்ளிட்ட எதிர்ப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று உலக நாடுகள் அனைத்தும் பல யோசனையிலிருந்து வந்தனர்.

உலக நாடுகள் இந்த நோய்த்தொற்று பரவலை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று யோசித்து வந்த சமயத்தில் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழும் வகையில் இந்தியா ஒரு முடிவை மேற்கொண்டது. அதாவது நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது மத்திய அரசு.

அதோடு சமூக இடைவேளை அனைவரின் மத்தியிலும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது மத்திய அரசு.

இந்த ஊரடங்கு உத்தரவு, சமூக இடைவேளை உள்ளிட்ட செயல்கள் காரணமாக. இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறையத் தொடங்கியது. இதனை கவனித்த உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பின்தொடர ஆரம்பித்தனர்.

இந்நிலையில், ஒரே நாளில் இந்தியாவில் 2841 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் பாதிப்பான 2,897 மற்றும் நேற்றைய தினம் 2827 என இருந்த நோய்த் தொற்று பாதிப்பு இன்று 2841 என அதிகரித்திருக்கிறது. நாட்டில் ஒட்டுமொத்த நோய் தொற்று பாதிப்பு 4,31,13,413லிருந்து 4,31,16,254 என அதிகரித்திருக்கிறது.

நாட்டில் ஒரே நாளில் 3,295 பேர் நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக, இந்தியாவில் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,25,70,165லிருந்து 4,25,73,460 என அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 19,067லிருந்து 18,604 என குறைந்திருக்கிறது.

நாட்டில் நோய்த்தொற்றுக்கு ஒரே நாளில் 9 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதனால் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,24,190 என பதிவாகியிருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Previous articleஇன்ப அதிர்ச்சி! உலக அளவில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 47 கோடியை கடந்தது!
Next articleஅசானி புயல் எதிரொலி! 18 மாவட்டங்களில் அடுத்த 3மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை!