அதிர்ச்சி நாட்டில் சற்றே குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

0
130

நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் பரவத் தொடங்கிய நாள் முதல் நாள்தோறும் மத்திய, மாநில, அரசுகள் சார்பாக நோய்த்தொற்று பரவல் நிலவரம் அதிலிருந்து குணமடைந்தவர்களின் நிலவரம் மற்றும் பரிசோதனை செய்யப்பட்ட எண்ணிக்கையின் நிலவரம் உள்ளிட்டவற்றை மத்திய, மாநில, அரசுகள் வெளியீடு செய்து வருகின்றன.இது அரசின் வெளிப்படை தன்மையை காட்டும் விதமாக இருந்து வருகிறது.

மத்திய, மாநில, அரசுகள் தனித்தனியே இந்த நோய்த்தொற்று பரவல் விகிதம் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகின்றன.

அந்த விதத்தில் நாட்டின் தினசரி நோய் தொற்று பாதிப்பு குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கிறது அதனடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1685 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே நேற்றையதினம் பாதிப்பான 1938 விட சற்று குறைவாகும்.

இதன் காரணமாக, நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பு உண்டானவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,030,16,372 இன்று அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் நோய் பரவலால் பாதிக்கப்பட்டவர்களில் 21,530 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்ற 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 2,499 பேர் குணமடைந்திருக்கிறார்கள் இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,024,78087என அதிகரித்திருக்கிறது.

இந்த நோய்த்தொற்று தாக்குதல் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் பலியாகியிருக்கிறார்கள் இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்று பாதிப்பு காரணமாக, பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,16,755 என அதிகரித்திருக்கிறது.

Previous articleமுடிவை நெருங்கும் உக்ரைன் ரஷ்யா போர்! உக்ரைன் ராணுவம் வெளியிட்ட தகவல்!
Next articleஇந்த தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அவ்வளவுதான் ஜாக்கிரதை! போக்குவரத்து துறைவிடுத்த அதிரடி எச்சரிக்கை!