தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்காலிக அடிப்படையில் சமூக பணியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் பெயர் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
பதவியின் பெயர் – சமூகப்பணியாளர் (Social Worker)
காலிப்பணியிடம் -1
வயது வரம்பு – அதிகபட்சம் 40 வயது
சம்பளம்- ரூ.18,536/-
ஊர்– தருமபுரி
சமூகப் பணி, சமூகவியல், சமூக அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
சமூகப்பாதுகாப்புத்துறை,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தருமபுரி.
விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்பக் கடைசி நாள் : 21.11.2022 மாலை 05.45 வரை.