1.வெள்ளியால் செய்யப்பட்ட மற்றும் ஜோடியாக உள்ள யானைகளை வீட்டின் வடக்கு திசையில் வைத்தால் செல்வம் பெருகும்.
2. திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பொழுது வேகமாக செல்லாமல், மெதுவாகவும் அமைதியாகவும் மலையின் முகட்டை அடிக்கடி பார்த்த வண்ணம், “ஓம் அருணாச்சலேஸ்வரா போற்றி, தென்னாட்டு சிவனே போற்றி, சிவாய நம” என்று மனதில் நினைத்த வண்ணம் நடந்து சென்றால் நற்சக்திகள் நம்மை விரைவில் வந்து சேரும்.
3. துடைப்பம் தேய தேய வீட்டில் வருமானமும் தேயும். பயன்படுத்தாத மற்றும் அறுந்து போன செருப்புகளை வீட்டில் வைத்திருந்தால் தடைகளை ஏற்படுத்தும்.
4. வீட்டில் விளக்கு ஏற்றாமலும், மந்திரம் சொல்லாமலும், பூஜை செய்யாமலும் இருந்தால் நாம் வாழக்கூடிய வாழ்க்கைக்கு எந்தவித அர்த்தமும் இல்லை.
5. துளசி, செம்பருத்தி, மல்லிகை, தாமரை, மூங்கில் இது போன்ற செடிகளை வீட்டில் வைத்து வளர்த்தால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். எந்த கோவிலுக்கு சென்றாலும் நம்மால் முடிந்த அளவிற்கு தான தர்மங்கள் அல்லது கோவிலுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது புண்ணியங்களை தேடித்தரும்.
6. கற்பூர வாசனை வீட்டை சுற்றிலும் தெய்வீக உணர்வை ஏற்படுத்தும். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டின் தென் கிழக்கில் கற்பூரம் ஏற்றினால் பணவரவு ஏற்பட்டு கடன் தொல்லைகள் நீங்கும்.
7. நண்பகல் 12 30 மணிக்கு மேல் 2:00 மணிக்குள் காகத்திற்கு உணவு வைத்தால் குடும்பத்தில் சுபிட்சமும், செல்வ வளமும் அதிகரிக்கும். அனைவரையும் இறைவழியில் ஈடுபடுத்துவது அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்த்து தரும்.
8. வீட்டின் வடக்கு மூலை தான் குபேர மூலையாகும். இங்கு பீரோவை வைத்து பணம் புழங்குங்கள். ஆனால் வட மேற்கு பகுதியில் பீரோவை வைக்கக்கூடாது. செலவுகள் அதிகரிக்கும்.
9. வாழ்க்கையில் அடுத்தடுத்து பல இழப்புகளை சந்தித்து மனம் விரக்தியில் இருப்பவர்கள், தியான நிலையில் இருக்கும் மகான்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபட்டால் அற்புதமான தெய்வீக சக்தி வீடு முழுவதும் நிறைந்திருக்கும்.
10. மாம்பழத் தோல் மற்றும் வேப்பங்கொட்டையால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை வாங்கி வீட்டின் பிரதான நுழைவு வாயிலில் வைத்தால் குடும்பத்தில் பண நஷ்டம் ஏற்படுவது விலகும். மேலும் உடலில் நல்ல சக்தி குடியேறவும், தூய்மையான உள்ளம் மற்றும் பேரின்பத்தை பெறவும் இது ஒன்றே வழியாகும்.