அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆன்மீக தகவல்கள்..!!

Photo of author

By Janani

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆன்மீக தகவல்கள்..!!

Janani

1. தலைக்கு குளித்த அன்றே எண்ணெய் தடவினால் சகோதரர்களுக்கு நல்லதில்லை.

2. உங்களுடைய தந்தையை நீங்கள் பகைத்துக் கொண்டால் தொழில் பாதிக்கும். அதே போன்று உங்களுடைய தாயை பகைத்துக் கொண்டால் கணவன் மனைவி உறவு பாதிக்கும்.

3. சகோதரிகளை பகைத்தால் ஆண் குழந்தை பிறக்காது. சொத்துக்களுக்கு சிக்கல் வரும்.

4. தினமும் மனைவியிடம் 10 ரூபாயை பெற்றுக் கொண்டு வெளியே வேலைக்கு செல்லும் பொழுது அந்த பணம் பெருகும். மனைவி தான் வீட்டின் மகாலட்சுமி. அவள் சந்தோஷமாக இருந்தால் பணம் பெருகும், அவள் அழுதால் பண வரவு பாதிக்கும்.

5. இரும்பு உலோகப் பொருட்களை யாருக்கும் கடனாக கொடுக்கக் கூடாது. குடும்பத்தில் சண்டை ஏற்படும்.

6. ஓடாத கடிகாரம் மற்றும் உடைந்த கண்ணாடி வீட்டில் இருந்தால் அது எதிர்மறை சக்திகளை உருவாக்கும்.

7. வாசலில் சாணம் தெளிப்பது நல்லது. முடியாதவர்கள் வெறும் தண்ணீரில் வாசல் தெளிக்க கூடாது. அது கெட்ட சகுனமாக கருதப்படும். எனவே தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து தெளிக்க வேண்டும்.

8. வீட்டில் எப்பொழுதும் பணக்கஷ்டம், சண்டைகள் ஏற்பட்டு கொண்டே இருந்தால் அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். அந்த அரிசியை எறும்பு சாப்பிடும் பொழுது தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

9. வாழை இலையில் சூடாக செய்த பிரசாதத்தை கடவுளுக்கு படைத்து, வழிபட்ட பின்னர் அதனை உணவாக உண்ணும் பொழுது பல நோய்கள் குணமாகும்.

10. காலையில் பெண்கள் குளித்துவிட்டு தான் சமையல் வேலையை தொடங்க வேண்டும். குளிக்க முடியாதவர்கள் பல் துலக்கி விட்டு, சிறிதளவு கல் உப்பை வாயில் போட்டுக் கொண்டு சமையல் வேலையை தொடங்கினால் தோஷம் நீங்கும்.

11. சமைக்கும் பொழுது பாத்திரத்தை சுரண்டக் கூடாது. இந்த சத்தம் மகாலட்சுமிக்கு பிடிக்காது. இதனால் தரித்திரம் உண்டாகும்.

12. மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு எந்த பொருளையும் யாருக்கும் கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அந்தப் பொருளுடன் நமது வீட்டில் இருக்கும் மகாலட்சுமியும் சென்று விடுவாள் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

13. முக்கியமாக பணம், தீப்பெட்டி, இரும்பு, தங்கம், உரை மோர் போன்றவற்றை கொடுக்கக் கூடாது. மறுநாள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்து விட வேண்டும்.