1. வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக:
*தினமும் நமது வீட்டில் விளக்கு ஏற்றுவதால் கடவுளின் ஆசியை பெறுவதோடு அக்னி பகவானின் ஆசியையும் பெறலாம். இப்படி கடவுளுக்காக நமது வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது பெரிய யாகம் செய்த பலன் கிடைக்கும்.
*மனைவி என்பவள் மகாலட்சுமியின் அம்சம் ஆவாள். எனவே ஏதேனும் முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும் பொழுது, மனைவியை எதிரே வர சொல்லி விட்டுப் போனால் செய்யக் கூடிய காரியம் கண்டிப்பாக வெற்றியில் முடியும்.
*செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் தலைக்கு குளித்துவிட்டு, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு, வீட்டிற்கு வந்து சாம்பிராணி தூபம் போட்டு தீப தூப ஆராதனை காட்டி வீட்டில் உள்ள தெய்வத்தை வணங்கினால், வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி மற்றும் பண பிரச்சனைகள் நீங்கும்.
2. வீட்டில் வறுமை நீங்கி பணப் புழக்கம் பெருக:
*வீட்டில் உப்பு, வெந்தயம், கருப்பு எள் ஆகியவற்றை இடித்து அதை ஒரு வெள்ளை நிற துணியில் கட்டி வீட்டில் தென்மேற்கு மூலையில் கட்டி விட்டால், வறுமை நீங்கி வரவேண்டிய பணம் வந்து சேரும். இதை 48 நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம். பணத் தட்டுப்பாடு என்பது வராது.
3. வீடு துடைக்கும் பொழுது கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை:
*வீடு துடைக்கும் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பை போட வேண்டும், அது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை நீக்கும்.
*செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தண்ணீரில் கல் உப்பை போடக் கூடாது. இது எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கும்.
*வீட்டை துடைக்கும் பொழுது வடக்கு திசையிலிருந்து ஆரம்பித்து வீட்டை முழுவதுமாக துடைக்க வேண்டும். மதிய நேரத்திற்குப் பிறகு வீட்டை துடைக்க கூடாது. காலை நேரத்தில் மட்டுமே துடைக்க வேண்டும்.
4. காலையில் எழுந்தவுடன் எதை பார்க்க கூடாது:
*காலையில் எழுந்தவுடன் அழுக்கு பாத்திரங்களை பார்க்க கூடாது. அவ்வாறு பார்த்தால் பண இழப்பு மற்றும் வறுமை ஏற்படும்.
*காலை எழுந்தவுடன் அடுத்தவர் நிழலையோ அல்லது உங்களது நிழலையோ பார்த்தால் ஆரோக்கியத்தில் தீங்கு ஏற்படும்.
*காலையில் எழுந்தவுடன் ஓடாத கடிகாரத்தை பார்க்க கூடாது. அது நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.
*காலையில் எழுந்ததும் கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள்.
5. வாங்கின கடனை அடைக்கவும், கடன் வாங்கவும் உகந்த நாட்கள்:
*நீங்கள் வாங்கின கடனை செவ்வாய்க் கிழமையும், செவ்வாய் ஓரையில் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் மதியம் ஒரு மணி முதல் 2:00 மணி வரையிலும் வாங்கின கடனை திரும்ப கொடுத்தால் சீக்கிரம் கடனை அடைத்து விடுவீர்கள். மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது.
*கேது மற்றும் செவ்வாய் இணைந்த நேரமான மைத்ர முகூர்த்த நேரமும் கடனை அடைக்க சிறந்த நேரம்.
*அதேபோன்று சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வரக்கூடிய சதுர்த்தி திதியும் கடனை அடைக்க சிறந்த நேரம்.
*மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வரக்கூடிய கறி நாட்களிலும் கடனை அடைக்கலாம். இது கடனை அடைக்க மிகவும் சிறந்த நாளாக இருக்கும்.