திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் சூரசம்ஹாரம்! சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி முருகப்பெருமான்!

Photo of author

By Sakthi

முருகப்பெருமானின் அறுவடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடம் தோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

கோவிலில் இந்த வருடம் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் ஆரம்பமானது. விழா நாட்களில் நாள்தோறும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. மூச்சுகால அபிஷேகம் தீபாராதனைக்கு பிறகு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

மதியம் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார் மாலையில் திருவாடுதுறை ஆதின கந்த சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி அம்பாளர்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாரதனை நடைபெற்றது.

இரவில் சுவாமி அம்பாளுகளுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6ம் நாளான நேற்றைய தினம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணி அளவில் விஸ்வரூப தீபாராதனை. 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணி அளவில் உச்சிகால அபிஷேகம் மதியம் ஒரு மணி அளவில் சாயரட்சை தீபாரதனை நடைபெற்றது.

இந்த நிலையில், மாலை 4 மணி அளவில் சுவாமி ஜெயந்தி நாதர் சூரசம்காரத்துக்கு எழுந்தருளினார். சூரசம்காரத்திற்காக சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரைக்கு வருகை தந்தார்.

அதன்பிறகு முதலாவதாக யானை முகம் கொண்ட தாரகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார். இரண்டாவதாக சிங்கமுகம் கொண்ட சிங்கமுக சூரனை சுவாமி ஜெயந்திநாதர் வேலால் வதம் செய்தார். இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன.

தொடர்ந்து தலையை ஆட்டைய படி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன் அதன் பிறகு தன்னுடைய முகத்தோடு எழுந்தருளிய சூரபத்னை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்.

மாமரமாகவும் சேவலாகவும் மாறி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன் சூரனை சம்ஹாரம் செய்து சேவல் கொடியாகவும், மயிலாகவும் ஜெயந்திநாதர் ஆட்கொண்டார்.

இந்த விழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை காவல்துறை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மேற்பார்வையில் சுமார் 2,700 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.