முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
182

நாட்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தென் மாநிலங்களில் மட்டுமல்லாமல் வடமாநிலங்களிலும் அளவுக்கதிகமான மழை பொழியும்.

அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிப்பதற்கான அறிகுறி தோன்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை கணித்து தென்மேற்கு பருவமழை ஆரம்பிப்பதை அறிவித்துவிடும்.

ஒவ்வொரு வருடமும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் ஆரம்பிப்பது வழக்கமான நிகழ்வு ஆனால் இந்த வருடம் அந்தமான் தீவுகளில் பருவமழை ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்ததாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வருகின்ற 27ம் தேதி தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்சமயம் சீதோஷண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, 27ஆம் தேதிக்கு பதிலாக 23-ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துவிடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துவிட்டால் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையின் காரணமாக, குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்படும்.

Previous articleஅமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஆசியக் கண்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் ஜோ பைடன்!
Next articleஇந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here