தொடர் விடுமுறை..சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் கவனத்திற்கு; அரசு போக்குவரத்து கழகம் சொன்ன ஹேப்பி நியூஸ்!!

0
13

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக தினம்தோறும் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பணிபுரிபவர்கள் என அனைவரும் சென்னையில் உள்ள நிலையில் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பரிசுகள் இயக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்றது. அதன் பிறகு சனிக்கிழமை மற்றும் ஞாயிறு என வர விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து மற்றும் பிற இடங்களில் இருந்தும் தமிழகம் முழுவதும் பயணிகள் செல்லும் வகையில் தினந்தோறும் இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, நாகை, பெங்களூர், ஓசூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 100 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 90 பேருந்துகளும் இயக்கப்படும். அதன் பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, திருவண்ணாமலை, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை அன்று 520 பேருந்துகளும் சனிக்கிழமை 550 பேருந்துக்களும் இயக்கப்படும்.

மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 24 பேருந்துகள் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது முதலே பேருந்தில் பயணம் செய்ய முன் பதிவு செய்து வரும் நிலையில் பயணிகள் நீண்ட தூரம் பயணத்தை திட்டமிட்டிருந்தால் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Previous articleமுகுந்தனுடன் கைகோர்த்த அன்புமணி… அதிர்ச்சியில் ராமதாஸ் – அடுத்தடுத்து நடப்பது என்ன?
Next articleபுதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்; வங்கி கணக்கில் நேரடியாக பணம் டெபாசிட்!!