தமிழ்நாட்டில் கடந்த 10-ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் இருப்பவர்களுக்கு நோய்தொற்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். இந்த சூழ்நிலையில், வரும் 31ம் தேதிக்குள் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள் என்று சுகாதாரத்துறை கூறியிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து எல்லா தடுப்புசி மையங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் தொடங்கப்பட்டு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு முழுவதும் வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.
அந்தக் விதத்தில் நேற்று தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகளில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், என்று ஒட்டுமொத்தமாக 600 பகுதிகளில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 50,598 பேருக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
இந்த சூழ்நிலையில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனை என 160 பகுதிகளில் பூஸ்டர் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமில் 20,072 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.