காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி! பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

Photo of author

By Sakthi

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி! பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

Sakthi

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த 8ம் தேதி முடிவடைந்த சூழ்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம், என ஒட்டுமொத்தமாக 61 பதக்கங்களை குறித்து பதக்க பட்டியலில் 4வது இடத்தை கைப்பற்றியது.

இந்த சூழ்நிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருக்கின்ற தன்னுடைய அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று காலை 11 மணியளவில் விருந்தளிக்கயிருக்கிறார்.

குத்துச்சண்டையில் பதக்கம் வென்றவுடன் பேட்டியளித்த இந்திய வீராங்கனை நிஹாத் சரின் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். அதோடு தன்னுடைய குத்துச்சண்டை கையுறையில் பிரதமரிடம் ஆட்டோகிராப் வாங்குவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.