நிம்மதி பண வசியம் தரும் சிவப்பு குண்டுமணி ரகசியம்..!! நினைத்தது நடக்கும்..!!

Photo of author

By Priya

kundumani benefits in tamil: இந்த குன்றின் மணியை தற்போது இருக்கும் பிள்ளைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கிராமங்களில் வளர்ந்த பிள்ளைகளுக்கும், ஒரு சில நபர்களுக்கும் இந்த குன்றி மணிகளை தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இதனை குண்டு மணி என்று கூறுவார்கள். ஆனால் இதன் பெயர் குன்றின் மணி. இதனை வயல்வெளிகளில் அதிகமாக பார்க்கலாம். மேலும் இதனை பெரியவர்கள் விஷக்காய் அதனால் கையால் தொட்டால் உடனே கழுவி விட வேண்டும் என்று கூறுவார்கள். இதன் மருத்தும் சார்பான சரியான விழிப்புணர்வு, இதன் தன்மை தெரியாமல் சாப்பிடக்கூடாது. முக்கியமாக குழந்தைகளின் கைகளுக்கு இந்த மணி கிடைக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த குன்றி மணியை நாம் வருடம் தோறும் பார்ப்போம். விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்படும் விநாயகரின் சிலையில் அவரின் கண்ணாக இந்த மணியை தான் பதித்து கொடுப்பார்கள். பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். இந்த குன்றி மணிக்கு ஆன்மீக ரீதியான நிறைய கதைகள் உண்டு. மேலும் தமிழர்களின் வாழ்வியலில் கலந்த ஒரு மணி தான் இந்த குன்றி மணி. வீட்டில் ஒரு குண்டு மணி தங்கம் கூட இல்லை என்று கூறுவார்கள். பழங்காலந்தொட்டே இந்த குன்றி மணி செல்வத்தை வசிகரிக்கும் ஆற்றல் உடையதாக இருந்துள்ளது. இந்த குன்றி மணி பற்றிய ஆன்மீக ரீதியான பயன்கள் பற்றி (kundrimani benefits in tamil) பார்க்கலாம்.

குன்றி மணி ரகசியம் – kundumani benefits in tamil

குன்றின் மணியை வீட்டு புஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

இந்த குன்றி மணியால் வீட்டில் உள்ள கண்திருஷ்டி, பில்லி, சூனியம், போன்றவற்றிற்கு இதனை வீட்டில் வைத்து வழிபட்டால் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.

மேலும் இந்த குன்றின் மணியில் பல வகையான நிறங்களில் காணப்படுகிறது. இது கருப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு நிறந்த கலவையாக காணப்படுகிறது. கருப்பு நிற குன்றின் மணி காளியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. எனவே எதிரிகளால் உங்களுக்கு மாந்திரீகம் போன்றவைகள் இருந்தால் அது இந்த கருப்பு குன்றின் மணியால் தீர்க்கப்படுகிறது.

வெள்ளை நிற குன்றின் மணி அம்மனின் உருவமாக பார்க்கப்படுகிறது. இதனை வீட்டில் வைத்து வழிபட்டால் உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் தீரும். நேர்மறை ஆற்றல் கிடைக்கும்.

இந்த குன்றின் மணியை தாயத்து செய்து இடுப்பில் கட்டிக்கொள்ளலாம். தொழில் செய்யும் இடம், வீடு, பணம் வைக்கும் இடத்தில் இதனை ஒரு சிறு துணியில் கட்டி வைத்து வழிப்பட்டால் எதிர்மறை ஆற்றல் விலகி செல்வம் பெருகும்.

சிலருக்கும் சம்பாதிக்கும் பணம் வந்த உடனே செலவாகிறது என்ற நிலை இருக்கும். இந்த குன்றின் மணியை வீட்டின் பூஜை அறையில் செப்பு டம்ளரில் போட்டு வைத்து வழிபடலாம். இதனால் பண வசியம் ஈர்க்கப்படும். தினந்தோறும் கடவுளுக்கு விளக்கேற்றி எப்பொழுதும் போல் சாமி கும்பிடுங்கள். இதனால் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் மறைந்து விடும்.

மேலும் கேரளாவில் குருவாயூர் கோயிலில் இந்த குன்றின் மணி பரிகாரம் சிறப்பு (kundrimani uses in Tamil) வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

குறிப்பு: இந்த குன்றின் மணி ஆன்மீக ரீதியாக வீட்டில் பயன்படுத்தலாம். ஆனால் இதனை மருத்தும் சார்ந்த எவ்வித நோய்களுக்கும் பயன்படுத்த கூடாது.  மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது. எனவே வீட்டில் வைத்து வழிபட்டு வருபவர்கள் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாதவாறு, கண்களில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: உங்கள் வீட்டில் மயில் தோகை வைத்துள்ளீர்களா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!