Breaking News

EPS கோட்டையில் பிளவு.. அதிமுகவுக்கு  எதிராக திரும்பும் நயினார்.. ஓபிஎஸ் ரீ என்ட்ரி.. 

Split in EPS stronghold..Naynar returning against AIADMK..OPS re-entry..

ADMK BJP: 2026 க்கான சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் அயராது உழைத்து வருகின்றன. தமிழக கட்சிகள் மட்டுமல்லாது தேசிய கட்சிகளும் இந்த தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருகின்றன. பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக அதிமுக உடன் கூட்டணி அமைத்து தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. பல ஆண்டு காலமாக தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவித்து வரும் பாஜக இந்த முறையாவது வெற்றி பெற வேண்டுமென பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் அதன் கூட்டணி கட்சியான அதிமுகவின் செயல்பாடுகள் பாஜகவை தோல்வியை நோக்கியே தள்ளுகின்றன.

அந்த வகையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரி செய்ய பாஜக எவ்வளவு முயற்சித்தும் இபிஎஸ் அதற்கு ஒத்து போகவில்லை. பல முக்கிய முகங்களையும் தொடர்ந்து நீக்கி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக இபிஎஸ்க்கு எதிராக ஒரு திட்டத்தை தீட்டியுள்ளதாக தெரிகிறது. இதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை இபிஎஸ்க்கு எதிராக திருப்பியுள்ளது டெல்லி மேலிடம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சில நிகழ்ச்சிகளும் அரங்கேறியுள்ளன. இபிஎஸ்யை கடுமையாக எதிர்த்து வரும் அண்ணாமலையுடன் இணைந்து என் ஆட்டம் தொடங்க போகிறது என்று நயினார் கூறியுள்ளார். மேலும் இபிஎஸ் தலைமையை ஏற்க்காத டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

இந்த செயல்பாடுகள் அனைத்தும், நயினார் இபிஎஸ்க்கு எதிராக திரும்பி விட்டார் என்பதை உறுதிப்படுத்திய நிலையில், தற்போது புதிதாக அவர் கூறிய செய்தி அதனை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் சேர வேண்டும், அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி இருக்கும் கூட்டணியில் சேர மாட்டோம் என்று கூறி வரும் ஓபிஎஸ்யை அதிமுகவில் சேர வேண்டும் என்று நயினார் கூறுவது பாஜக ஒட்டு மொத்தமாக அதிமுகவிற்கு எதிரான வேலைகளை செய்து வருகிறது என்பதை நிரூபிக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.