பெண்ணின் கைப்பையில் இருந்து குதித்து ஓடிய அணில்கள்!!! மிரண்டு போன அதிகாரிகள்!!!
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பெண்ணின் கைப்பையை சோதனையிட்ட பொழுது பெண்ணின் கைப்பையில் இருந்து இரண்டு அணில்கள் குதித்து ஓடியது. இதைக் கண்டு அதிகாரிகள் மிரண்டு போனர்கள்.
இந்தியாவில் சில அறிய வகை பறவைகள், விலங்குகள் வளர்த்துவதற்கு தடைகள் இருந்து வருகின்றது. அந்த வகையில் பச்சைக் கிளிகளை மக்கள் தங்களுடைய செல்லப் பிராணிகளாக வீட்டில் வளர்த்துவதற்கு தடை இருந்து வந்த நிலையில் தற்பொழுது இது தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அதாவது மக்கள் தங்களின் வீடுகளில் பச்சைக் கிளிகளை வளர்த்து வருகிறார்களா என்பது குறித்து கண்காணித்து அவ்வாறு வீட்டில் பச்சைக் கிளிகள் வளர்த்து வந்தால் அதை பறிமுதல் செய்து வளர்த்து வரும் வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசியாவில் இருந்து வந்த பெண் கொண்டு வந்த இரண்டு அரியவகை அணில்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பெதிக் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்பொழுது அந்த விமானத்தில் பயணம் செய்த விஜயலட்சுமி என்ற பெண் பயணியை அதிகாரிகள் சாதனை இட்டனர்.
விஜயலட்சுமி அவர்களின் கைப்பையை சாதனை செய்த பொழுது கைப்பையின் உள்ளே இருந்து இரண்டு அரியவகை வாஸ்து அணில்கள் குதித்து ஓடின. இதை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் மிரண்டனர்.
பின்னர் விரட்டி பிடித்து வாஸ்து அணில்களை பிடித்த அதிகாரிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வந்த பிறகு இந்த அணில்கள் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து விஜயலட்சுமி அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் வாஸ்துக்காக இந்த அணில்கள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.