விட்டிருந்தால் அடித்து இருப்பாரோ? மைதானத்தில் கடும் கோபத்தில் இலங்கை அணியின் பயிற்சியாளர்!

Photo of author

By Sakthi

இந்திய அணியின் பேட்டிங்கில் ஒன்பதாவது வீரரை கூட விக்கெட் எடுக்க இயலவில்லை என்பதை இலங்கை அணியின் கேப்டனும், பயிற்சியாளரும் சண்டையிட்டு கொண்ட காணொளி ஒன்று வைரலாகி வருவதாக சொல்லப்படுகிறது. இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி வெற்றி பெற சாதகமான சூழல் இருந்த நிலையிலும் தீபக் சாகர் அதனை மாற்றி அமைத்திருக்கிறார்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி சீரான இடைவெளியில் தன்னுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 275 ரன்களை எடுத்தது அந்த அணி. 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் வெளியேறி அதிர்ச்சிக்கு உள்ளாக்கி னார்கள். பிரித்வி ஷா, 13 ஷிகர் தவான் 29, இஸ்லாம் கிஷன் ஒன்று மனிஷ் பாண்டே 37 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினார். சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 53 ரன்களை விளாசி வெளியேறினார்.

இந்திய அணி 193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி அந்த நிலையில், ஒன்பதாவது பேட்ஸ்மேனாக தீபக் சாஹர் யாரும் யாரும் எதிர்பாராத விதத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சை மிகவும் நேர்த்தியாக கையாண்டு அவர் 69 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு பெற்றிருக்கின்றார். இந்திய அணியின் முன்வரிசை பேட்ஸ்மேன்களை மிக சுலபமாக சாய்த்த இலங்கை பந்துவீச்சாளர்கள் இவரை மட்டும் எதுவுமே செய்ய இயலவில்லை.

ஒரு அணியின் பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது வீரரை கூட அவுட்டாக முடியாதா என்று இலங்கை அணியின் பயிற்சியாளர் ஆர்தர் மிகக் கோபமாக டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் கடுமையான கோபத்தில் திட்டி கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு மைதானத்திற்கு வந்த அவர் இலங்கை அணியின் கேப்டன் உடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இனி உங்களை வைத்துக்கொண்டு எதுவுமே செய்ய இயலாது என்று பேசுவது போல அவர் மிகவும் கோபத்துடன் சென்ற வீடியோவை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இலங்கை அணி அண்மைக்காலமாக மிகவும் பரிதாப நிலைக்கு சென்றிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தோல்வியை சந்தித்து வந்த இலங்கை அணி இந்தியாவின் இரண்டாம் தரம் என்று எல்லோராலும் விமர்சனம் செய்யப்பட்ட வீரர்களுடன் கூட வெற்றியை ருசிக்க முடியவில்லை. ஆகவே இவர்கள் இனி டி20 உலக கோப்பையில் தகுதிச்சுற்றில் கூட தேற மாட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.