ஆசிய உட்கட்டமைப்பு வங்கியிடம் கடன் பெற இலங்கை அரசு பேச்சுவார்த்தை! எத்தனை கோடி தெரியுமா?

Photo of author

By Sakthi

தற்போது நம்முடைய அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இந்த நிலையில், அந்த நாட்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு நடுவில் திடீரென்று இலங்கையில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது.பின்னர் அந்த அவசரநிலை மீண்டும் விலக்கிக் கொள்ளப்பட்டது, ஆனாலும் மறுபடியும் அவசர நிலை பிரகடனம் நடத்தப்படலாம் என்று சிலர் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் அந்த நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தும் இலங்கை அரசின் வெளியுறவுக் கொள்கை தான் நாட்டின் இத்தகைய நிலைமைக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்து வருகிறார்கள்.

என்னதான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி வந்தாலும் இலங்கை இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மிகப்பெரிய கடனுதவி பெற்றிருக்கிறது. தொடர்ந்து கடன் பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில், சீன அரசு பின்னணியிலான ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கிகளிலிருந்து 10 கோடி டாலர் அவசர கடன் பெற இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என கூறப்படுகிறது.

தங்களுடைய நாட்டின் அந்நிய செலாவணி இருப்பை மேம்படுத்திக் கொள்ளும் விதத்தில் இந்த கடன் கேட்க்கப்பட்டுள்ளதாக இலங்கை நிதி அமைச்சக வட்டாரங்கள் நேற்றைய தினம் தெரிவித்திருக்கின்றன.

இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பை ஊக்கப்படுத்தும் விதத்தில் சீனாவிடன் கடன் பெற இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.