இலங்கை அணிக்கு எதிராக புதிய சாதனையைப் படைக்குமா இந்திய அணி!

Photo of author

By Sakthi

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் ஆரம்பமானது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் போதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 18 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்தத் தொடரின் மூலமாக 1 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னணியில் இருந்தது. இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஒருநாள் போட்டியைப் போலவே இதிலும் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது இசுரு உடானா மாற்றப்பட்டு சுசன் ரஜிதா சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அதேநேரம் தவான் தலைமையிலான இந்திய அணியில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. அதே அணி தான் விளையாடியது. முதல் போட்டியில் பிரித்வி ஷா ஹெல்மெட்டில் பந்து மிக பலமாக தாக்கியதில் அவர் சற்று தடுமாறியது ஆக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, அவர் நேற்று நடைபெற்ற போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் நீடித்து வந்த நிலையில், அந்த அணியில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்திய அணியில் ஒரு மைனஸ்பாயிண்ட் என்னவென்றால், இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் கடைசி ஓவர்களில் ரன்களை தாராளமாக வாரி வழங்குவதுதான். இலங்கை அணி கடைசி 5 ஓவர்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ரன்களை முந்தைய போட்டியில் குவித்தது. இதனால் இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் கவனமுடன் செயல்பட வேண்டும்.