Tamilnadu fishermen problem: இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க இந்திய பிரதமர் மோடி உடன் இன்று பேச்சுவார்த்தை.
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் அனுர குமார திசாநாயக்க இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் அதிபரான பிறகு தமிழக மீனவர்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட திருத்தங்களை மாற்றி இருந்தார். அதாவது தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை இலங்கை இராணுவம் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கினார்.
இலங்கை எல்லைக்குள் அத்துமீறி மீனவர்களுக்கு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்படும் போன்ற கடுமையான நடவடிக்கையை அறிவித்து இருந்தார் இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த இலங்கை அரசுக்கும் தமிழக மீனவர்களுக்கும் உள்ள பிரச்சனை ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது.
குறிப்பாக எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை சிறைபிடித்த அவர்களின் படகுகளை தீ வைப்பது, மீனவர்களை சிறைபிடித்தது என பல கொடுமைகள் செய்து வருகிறது இலங்கை ராணுவம். இலங்கை கடற்படையால் கடந்த 1974 முதல் 500-க்கும் அதிகமான மீனவர்கள் கொள்ள பாட்டு இருக்கிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இலங்கை ராணுவத்தினரால் பாதிக்கப்பட தமிழக மீனவர்கள் குடும்பங்கள் இன்றளவும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க இந்தியாவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க .
எனவே இந்த பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.