இலங்கையின் பொருளாதார சிக்கல்! மீண்டும் கிங்மேக்கர் ஆகும் தமிழர்கள்!

Photo of author

By Sakthi

இலங்கையில் தற்சமயம் வரலாறு காணாத பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அந்த ஆடு போராடி வருகிறது அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், உள்ளிட்ட விலைகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அந்த நாட்டில் அதிகரித்திருக்கிறது.இதற்கான தீர்வுதான் என்ன? என்று அந்த நாட்டு அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது.

இந்த நிலையில், இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க வகை செய்யும் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்பது இலங்கை தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் அங்கு ஆளும் அரசுகள் இதனை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக சொல்லப்படுகிறது.

13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துதல் மாகாண தேர்தலை முன்கூட்டியே நடத்துவது , அதோடு நல்லிணக்கத்தை உண்டாக்குவது போன்றவற்றை தொடர்ந்து வலியுறுத்தி வரும் இந்தியாவும் இதன் மூலமாக இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து தன்னுடைய உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

இந்தக் கோரிக்கையை இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிடம் நேரில் வலியுறுத்துவதற்காக தமிழ் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். ஆனாலும் அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே இந்த சந்திப்பு நடைபெறாமல் இருந்து வந்தது. ஓரிரு முறை இதற்கான வாய்ப்புகள் கிடைத்தபோதும் கடைசி சமயத்தில் சந்திப்பு கைவிடப்பட்டது. இதன் காரணமாக தமிழ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து ஏமாற்றத்தை சந்தித்து வந்தார்கள்.

ஆகவே தமிழ் தலைவர்களை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை கண்டிக்க வலியுறுத்தி கடந்த மாதம் அதிபர் மாளிகை செயலகம் முன்பு தமிழ் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தினர். கிழக்கிலும், வடக்கிலும், தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக நேற்று தமிழ் தலைவர்களை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சந்தித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் பங்கேற்று கொண்டார்கள். இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை ஆனாலும் 13-வது சட்டத் திருத்தத்தை முன்வைத்தே இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கருதப்பட்டு வருகிறது.

ஏனென்றால் 13-வது சட்டத்திருத்தத்தை அர்த்தமுள்ள விதத்தில் அமல்படுத்துவது பேச்சுவார்த்தையின் மயமாக இருக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்தித் தொடர்பாளர் சுமந்திரன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். முதலமைச்சரை ஆளுநர் கட்டுப்படுத்துவது முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இலங்கை அரசு தற்சமயம் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்புவதாக தெரிவித்த செய்தி தொடர்பாளர் இதற்காக வெளிநாடு வாழ் தமிழர்களிடமிருந்து முதலீடுகளைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். ஆனாலும் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த பிறகுதான் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்திருக்கிறார்.