மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி சந்தித்து வருகின்ற நம்முடைய அண்டை நாடான இலங்கையில் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே அந்த நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருக்கிறார்.
அவர் அங்கிருந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவிருக்கிறது இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றைய தினம் நடந்தது.
இதற்கு முன்பாக அதிபர் போட்டியிலிருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தான் நேசிக்கும் நாடு மற்றும் மக்களின் நலனுக்காக போட்டியிலிருந்து விலகுவதாக அவர் தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாசா தல்லாஸ் அலகப் பெருமாவை அதிபர் பதவிக்கு முன்னிறுத்துவதாக தெரிவித்தார்.
இவர் அதிபர் பதவியின் போட்டியில் இருந்து விலகியதை எடுத்து இடைக்கால அதிபர் ரனில் விக்கிரமசிங்கே மார்க்ஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அனுராகுமார திசநாயக ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து பிரிந்து வந்துள்ள பல்லாஸ் அலகபெருமா உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிபராக தேர்வு செய்யப்படுபவருக்கு 113 பேரின் ஆதரவு தேவைப்படும்.
தற்போதைய சூழ்நிலையில், இலங்கை பொதுஜன பெரமுன கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தல்லாஸ் அலகபெருமாவை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை அதிபராகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை பிரதமராகவும். தேர்வு செய்வதற்கு அவர்கள் திட்டமிட்ருப்பதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாகவே சஜித் பிரேமதாசா அதிபர் போட்டியிலிருந்து விலகி இருக்கிறார். இந்த சூழ்நிலையில், ரணில் விக்ரமசிங்கே அதிபராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முதல் முறையாக அந்த நாட்டு சபாநாயகரும் வாக்களிக்கவிருக்கிறார். 1993ஆம் வருடத்திற்கு பிறகு இலங்கையில் இடைக்கால அறிவுரை தேர்வு செய்வது இதுவே முதல் முறையாகும்.
1993 ஆம் வருடம் அதிபராக இருந்த ரணசிங்க பிரேமதாசா கொல்லப்பட்டதையடுத்து நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலமாக டிபிவிஜே துங்க அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதிபராக தேர்வு செய்யப்படுபவர் 28 மாதங்கள் அந்த பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.