உலகக் கோப்பை தொடர்பு இருந்து வெளியேறிய இலங்கை அணியின் தசன் ஷானகா!!! இலங்கை அணியின் அடுத்த கேப்டன் யார்!!?

Photo of author

By Sakthi

உலகக் கோப்பை தொடர்பு இருந்து வெளியேறிய இலங்கை அணியின் தசன் ஷானகா!!! இலங்கை அணியின் அடுத்த கேப்டன் யார்!!?
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் தான் ஷானகா விலகியது அடுத்து புதிய கேப்டனாக குசால் மென்டிஸ் அவர்களை நியமித்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 5ம் தேதி உலகக் கோப்பை தொடர் தொடங்கிய இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் தசன் ஷானகா அவர்களுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வி பெற்றது.
மேலும் தென்னாப்பிரிக்கா அணியுடனான போட்டியிலும் இலங்கை அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வி அடைந்ததால் தசன் ஷானகா அவர்களின் கேப்டன்சி குறித்து கேள்வி எழுந்தது.
இதையடுத்து தசன் ஷானகா அவர்களுக்கு காயம் ஏற்பட்டதாலும் இலங்கை அணியின் தொடர்பு தோல்விகளாலும் தசன் ஷானகா அவர்கள் கேப்டன் பதவியில் இருந்தும் உலகக் கோப்பை தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து இலங்கை அணியின் புதிய கேப்டனாக குசால் மென்டிஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் உலகக் கோப்பை தொடர்பு இருந்து விலகிய தான் ஷானகா அவர்களுக்கு பதிலாக கருணரத்னே அவர்கள் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணி அடுத்த லீக் சுற்றில் அக்டோபர் 16ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கின்றது.