அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் சிறப்பம்சங்கள்!

0
135

சன்னதியின் முன் மண்டபத்தில் இருக்கின்ற தூணில் ஒரு அங்குல அளவே இருக்கின்ற ஒரு சிறிய அளவிலான விநாயகர் சிலை இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை மற்றும் விரல் நகங்களும் துல்லியமாக தெரியுமாறு மிக நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது மிகச்சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்தில் இருக்கின்ற தட்சிணாமூர்த்தி தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சமாக இருக்கிறது. அம்பாள் சன்னதி எதிரில் இருக்கின்ற ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது. நகரத்தார் திருப்பணி செய்த கோவில்களில் இதுவும் ஒன்று என்று சொல்லப்படுகிறது.

இந்த கோவிலில் இருக்கும் பைரவர் சொர்ண, ஆகர்ஷண பைரவர் என்று போற்றப்படுகிறார். இரட்டை நாய் வாகன பைரவர் இருப்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. தல விநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர், நடராஜர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பெருமாள், மகாலட்சுமி, முருகன், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் இங்கே இருக்கின்றன.

குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் திருமணம் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்குவதற்கு இங்கே வழிபடுகிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்குவதற்கும் இங்கே இருக்கின்ற பைரவரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். திருமணத்தடை இருக்கின்ற பெண்கள் வாராஹிக்கு சந்தனகாப்பு செய்து நெய் தீபமேற்றி வழிபாடு செய்கிறார்கள்.இந்த திருக்கோவில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நகரில் அமைந்திருக்கிறது இந்த கோவில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானது என்றும் சொல்லப்படுகிறது.

Previous articleதமிழகத்தில் ஆகஸ்டு மாதத்திலிருந்து பள்ளிகள் திறப்பா? வெளிவரும் ஆலோசனை முடிவுகள்!
Next articleதிருமண தடையா? உடனே இந்த கோவிலுக்கு செல்லுங்கள்!