மாவட்டங்களில் அதிகரிக்கும் உள்கட்சி பூசல்! அதிரடி முடிவு எடுத்த ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

தேர்தலை நோக்கி மிக வேகமாக பயணம் செய்து கொண்டிருக்கிறது திமுக.

கட்சி பலப்படுத்துவதற்கும் கட்சியின் நிர்வாக வசதிக்காகவும் மாநிலம் முழுவதும் மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அவர்களுடைய தலைமையில் திமுக தற்போது இயங்கி வருகின்றது.

சமீபத்தில் இவை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டார்கள்.

இப்போது புதியதாக உதயமாகி இருக்கும் மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு அதற்கும் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், கட்சியின் தலைமை ஒரு புது முடிவிற்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் உள்கட்சி பூசல் இருக்கின்றன.

மதுரை மாவட்டத்தில் டாக்டர் சரவணனுக்கும், ராஜன் செல்லப்பாவிற்கும், மோதல் இருந்து வருகின்றது. தென்காசி மாவட்டத்தில், மாநில வர்த்தகப் பிரிவு துணைத் தலைவர் அய்யாதுரை பாண்டியனுக்கும், மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனுகும் மோதல் இருந்து வருகின்றது.

இவ்வாறு அநேக அனேக உட்கட்சிப் பூசல்கள் பற்றிய தகவல் திமுக தலைமைக்கு வந்திருக்கின்றது.

மாநிலம் முழுவதும் ஏராளமானோர் எம்எல்ஏ சீட்டிற்கு அடி போடும் இந்த நிலையில், இதுபோன்ற மோதல்கள் உருவாகின்றன என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இப்பிரச்சனையை சமாளிப்பதற்காக கட்சியில் புதிய பொறுப்புகளை திமுக அமைக்க இருக்கின்றது.

மாநிலம் முழுவதும் மாவட்டங்கள் வாரியாக இந்த பொறுப்புக் குழு அமைக்கப்படும் என்று தெரிகின்றது.

ஒவ்வொரு பொறுப்புகளிலும் 6 நபர்களுக்கு பதவிகள் கொடுக்கப்பட்டு மாவட்டங்கள் முழுவதும் எங்கெங்கே கருத்துவேறுபாடு இருக்கின்றதோ அவர்களை அழைத்து பேசி அவர்களுக்கு இந்த பொறுப்புக் குழு பதவிகள் தரப்படுகின்றன.