திடீரென்று ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்! பரபரப்பில் ஆளுநர் மாளிகை!

Photo of author

By Sakthi

முதல்வரை சந்திக்காத ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து இருக்கின்றார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது இரண்டு ஆண்டுகளாக அது சம்பந்தமாக ஆளுநர் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. விடுதலை கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் காலதாமதத்திற்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேச தொடர்புகள் தொடர்பாக வழக்கு விசாரணை ஆணையம் மற்றும் சிபிஐ விசாரணை நடத்தி வருவதால் அந்த விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளும் தரப்பு தெரிவித்தது. ஆனால் 7 பேர் விடுதலைக்கு தங்களுக்கும் சம்பந்தம் கிடையாது ஆளுநர் கையில்தான் முடிவு இருக்கின்றது என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்திருக்கின்றது. இதன் காரணமாக இப்போது 7 பேர் விடுதலை கோரிக்கை மீண்டும் தலைதூக்க தொடங்கியிருக்கின்றது.

இந்த நிலையில் சென்னை கிண்டி ராஜ்பவன் இல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்றைய தினம் சந்தித்து பேசி இருக்கின்றார். அப்போது துரைமுருகன், பொன்முடி, ஆர் எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதி மாறன், ஆகியோர் உடன் இருந்தார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் ஆளுநரிடம் மனு கொடுத்து இருக்கின்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் 7 பேரும் 29 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்கள் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று சிபிஐ தெரிவித்து விட்டது ஆகவே 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றோம் சட்ட ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் தெரிவித்து இருக்கின்றோம் என்று கூறினார்.