பொதுமக்களை சந்திக்க புது ப்ளான் போட்ட திமுக தலைவர்! சந்தித்த அவமானம்!

0
149

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் வகையிலான ஸ்டாலின் அணி, என்ற ஒரு செயலியை அறிமுகப்படுத்தி இருக்கின்றது திமுக.

இந்த செயலியை கூகுள் பிளேஸ்டோருக்கு போய் பதிவிறக்கம் செய்து கொண்டால், ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் விவரங்கள் என்னென்ன பணிகள் இருக்கின்றனர் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

அதோடு ஸ்டாலினின் அறிக்கைகள், முகநூல் பதிவுகள், போன்ற அனைத்தையும் இந்த சேவையின் மூலமாக நாம் கண்டு கொள்ள இயலும்.

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் மேற்கொள்ளவிருக்கும் பிரச்சாரங்கள், பயணத்திட்ட விவரங்கள், போன்றவை இனி அந்த அந்த செயலியில் இணைக்கப்படும் என்று தெரிகிறது.

இச்செயலியில், கட்சியை விட்டு நீக்கிய கு.க செல்வத்துடன் ஸ்டாலின் இருக்கும் ஒரு புகைப்படம் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

அதேபோல இச்செயலியை பதிவிறக்கம் செய்தால், ஸ்டாலினை சந்திக்கலாம் என்று கூறப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. நீங்கள் பதவிக்கு வரவேண்டும் என்றால், தமிழகத்தை ஆள வேண்டும் என்றால், நீங்கள் தான் எங்களை வந்து பார்க்கவேண்டும். நாங்கள் ஓட்டு போட்டால் தான், நீங்கள் ஆட்சிக்கு வர இயலும் நீங்கள் எங்களை வந்து பார்ப்பது தான் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர் சமூக வலைதள வாசிகள்.

Previous articleஜிஎஸ்டி நிதியுதவி இம்முறை மாநிலங்களுக்கு கிடைக்குமா ?? ஒரு லட்சம் கோடியை தாண்டியதின்னால் எதிர்பார்ப்பு !!
Next articleவேகமாக செல்லும் ரயில் சோதனையில் ஒரு துளி கூட சிந்தாத தண்ணீர் !!