முரண்டு பிடிக்கும் ஸ்டாலின்! உடையும் திமுக கூட்டணி!

Photo of author

By Sakthi

திமுக கூட்டணி கட்சிகளுக்கு அந்த கட்சிகள் கேட்கும் இடங்களையும் தராமல் தனிச் சின்னத்தில் போட்டியிட விடாமல் ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டு கொண்டிருப்பதால் கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். மறுபடியும் இதன் காரணமாக மக்கள் நல கூட்டணி உருவாகும் என்ற பேச்சுக்களும் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதோடு காங்கிரஸ் கட்சி திமுக கழற்றிவிட நினைப்பதால் அந்தக் கட்சியும் மக்கள் நல கூட்டணி சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் கூட்டணி கட்சிகளை எப்போதும் நிர்பந்தம் செய்யவில்லை எனவும் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்துவதற்கு சதி நடந்து கொண்டிருக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

மக்களிடையே பிரபலமான ஒரு சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகள் விருப்பப்பட்டால் அதை கொடுத்து விடுவது நல்லது எனவும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு நான் நிர்பந்தம் செய்கின்றேன் என்று செய்திகள் வரும் காரணத்தால், கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சதி நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

சென்ற 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் புதிதாக உருவான மக்கள் நல கூட்டணி தற்சமயம் கிடையாது. அந்த கூட்டணி உருவாவதற்கு காரணமாக இருந்தவர் வைகோ வைகோவின் ஒருங்கிணைப்பு காரணமாக உண்டான இந்த கூட்டணி மாற்று அரசியலுக்கான முயற்சி என்று தெரிவிக்கப்பட்டாலும் அந்த தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது இந்த கூட்டணி. அதன்பிறகு திமுகவிற்கு தான் தன்னுடைய முழு ஆதரவு தெரிவித்து இருக்கிறார் வைகோ.

சென்ற மாதம் கடைசியில் திமுக தலைவர் ஸ்டாலின் தனிமையில் சந்தித்து 20 தொகுதிகள் வரை தன்னுடைய கட்சிக்கு வைகோ கேட்டதாகவும், அதற்கு ஸ்டாலின் அவர்களும் இசைவு அளித்திருப்பதாக ஒரு தகவல் உலாவிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக வைகோ முன்பைவிட சுறுசுறுப்பாக மக்கள் நல கூட்டணி இந்தத் தேர்தலில் அமையுமா என்று கேட்ட நேரத்தில் மக்கள் நல கூட்டணி உருவாவதற்கு இனி வாய்ப்பே கிடையாது என்று தெரிவித்தார். ஆனால் இப்போது உருவாகி இருக்கும் சூழலை பார்த்தால் மறுபடியும் மக்கள் நல கூட்டணி உருவாவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்து இருப்பதாக கூறுகிறார்கள்.

ஒரு புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி ,மற்றும் மதிமுக, ஐ.ஜே.கே போன்ற கட்சிகள் அதிக இடங்களை கேட்டு ஸ்டாலினை தொடர்பு கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். மறுபுறம் இந்த தேர்தலில் திமுகவின் சின்னத்தில் போட்டியிட தங்களுடைய சின்னத்தில் போட்டியிடுவதற்கு விருப்பம் என தெரிவித்திருக்கின்றனர்.

கேட்டிருக்கும் 20 தொகுதிகளில் 16 நிச்சயமாக கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்து வரும் வைகோவிற்கு 5 தொகுதிகளில் தான் கொடுக்கப்படும் என்று தகவல்கள் வந்திருப்பதாக தெரிகிறது. அதே போல தான் கம்யூனிஸ்டுகள், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி என மற்ற கட்சிகளின் நிலைமையும் என திமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் தெரிவித்து வருகிறார்கள்.

இறுதி பேச்சுவார்த்தையில், தங்களுடைய எதிர்பார்க்கும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள். அதிலும்கூட திமுகவின் மூத்த தலைவர்கள் தெரிவித்த தான் நடக்கும் என்று சொல்கிறார்கள். அவ்வாறு நடைபெற்றால் மீண்டும் மக்கள் நல கூட்டணி உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவிக்கிறார்கள். 25 இடங்களுக்கு மேலே எதிர்பார்த்து இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 11 இடம்தான் தரப்படும் என்று திமுக முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட காங்கிரஸ் கட்சியும் அதிருப்தியில் இருப்பதாக சொல்கிறார்கள். அதன் காரணமாக, காங்கிரஸ் கட்சியும் மக்கள் நல கூட்டணியில் இணைவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, திமுக மிகப் பெரிய சலசலப்பு ஏற்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்றைய தினம் மக்களிடையே பிரபலமான சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பினால் அதை ஏற்றுக் கொள்வது தான் நல்லது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு நான் நிர்ப்பந்தம் செய்கின்றேன் என்பதே உண்மை கிடையாது. இது கூட்டணியில் ஏற்படுத்தப்படும் சதி என்றுதான் நினைக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.