அமைச்சர் உதயகுமார் ஊழல் விவகாரத்தை கிழித்து தொங்கவிட்ட எதிர்க்கட்சித் தலைவர்! மிகுந்த அவமானத்தில் தலை குனிந்த அமைச்சர்!

0
149

அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை குட்கா விஜயபாஸ்கர் என்று சொன்னதைப்போல அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களை பாரத் நெட் உதயகுமார் என்று கூறலாம், 2000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை தன்னுடைய வசதிக்கு ஏற்ப வளைத்து கொள்ள நினைத்தார் உதயகுமார், என்று கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காணொளி மூலமாக பங்கேற்று பேசிய ஸ்டாலின் கிராமங்களுக்கு இணையதள வசதி வழங்குவதற்காக பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களை ஆப்டிகல் பைபர் கேபிள் என்ற கண்ணாடி நிலை கம்பியின் மூலமாக இணைக்க வேண்டும் இதற்காக சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் விடப்பட்டு இருக்கின்றது.

சில நிறுவனங்களுக்கு சாதகமான முறையில் டெண்டர் நிறுவனங்களில், அமைச்சர் உதயகுமார் மாற்றம் செய்து இருப்பதாக செய்திகள் பரவி இருக்கின்றது.

நானும் விரிவாக அறிக்கை வெளியிட்டு இருக்கின்றேன்.

உதயகுமார் அதற்கு மறுப்பு தெரிவித்தார். நான் சொல்வது தவறு என்று கூறினார். இந்த தகவல் கிடைத்ததும் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆர் எஸ் பாரதி புகார் கூறியும் பயன் இல்லாத காரணத்தால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது டெண்டரை விடவில்லை, விடாத டெண்டரில் எப்படி முறைகேடு நடந்து இருக்க இயலும் என்று நீதிமன்றத்திலேயே பொய் சொன்னார் என்றவர், திமுக ஏதோ பொய் சொன்னதாக பேட்டி கொடுத்திருக்கின்றார் உதயகுமார்.

ஆனாலும் அடுத்த சில நாட்களிலேயே அந்த டெண்டரை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டு விட்டது. உதயகுமாரின் ஊழல் போக்கை மத்திய அரசை கிழித்து தொங்க விட்டு விட்டது. ஒப்பந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் இருந்தது தான் இந்த ஒப்பந்தம் ரத்தானதற்க்கு காரணம். என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கின்றது.

தென்தமிழக மக்களின் வாழ்க்கைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து விட்ட தியாகி உதயகுமார், இதற்கு என்ன பதில் சொல்வார் என்ன விதிமுறைக்காக யாருக்கு சாதகமாக மாற்றினார். என்பது குறித்து அதிகாரிகளுக்கு தெரியும் என்று தெரிவித்தார்.

மேலும் உதயகுமாரின் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உடன்பட மாட்டேன் என சொன்ன தொழில்நுட்பத் துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.

கடைசியாக அவர் அந்த வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

டான்சி நெட் நிர்வாக இயக்குனரும் மாற்றப்பட்டார். உதயகுமார் ஊழலைப் போல ஒவ்வொருவர் வண்டவாளமும் இன்று தமிழக மக்களிடம் நாறிக் கொண்டிருக்கிறது என்றார் ஸ்டாலின்

Previous articleதமிழகத்தின் சிற்பி என ஸ்டாலின் புகழ்ந்த! அந்த நபர் யார் தெரியுமா!
Next articleஅந்த இரு நடிகர்களை பற்றி தெரியுமா! ஸ்டாலின் கூறிய சுவாரஸ்யமான தகவல்!