ஸ்டாலின் நினைத்தவுடன்! நடத்தி முடிக்கும் அந்த மூன்று பேர்!

Photo of author

By Sakthi

தமிழகம் மீட்போம் 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் மதுரை மாவட்ட திமுக சார்பாக நேற்று நடைபெற்றது, திமுக தலைவர் ஸ்டாலின் இதில் காணொலிக் காட்சி மூலமாக பங்கு பெற்றார்.

அப்போது அவர், மூர்த்தி. தளபதி, மணிமாறன், ஆகிய மூவரும் மூவேந்தர்கள் ஆக இந்த மதுரை மண்ணை கழகத்தின் களமாக மாற்றி இருக்கிறீர்கள் நான் என்ன நினைக்கிறேனோ அதனை அப்படியே செய்து காட்டும் முதல் தளபதிகளாக இவர்கள் செயல்பட்டு வருகின்றார்கள்.

வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் துரிதமாகவும் கூர்மையாகவும் செயல்பட்டு வருகின்றார்கள் அந்த மூவருக்கும் கழகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் ஸ்டாலின்.

எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தபோது திருச்செந்தூரை நோக்கி நீதி கேட்டு ஒரு பயணத்தை மதுரையில் இருந்து தான் தொடங்கினார் நம்முடைய உயிரிலும் மேலான தலைவர் கலைஞர்.

அத்தகைய நீதியின் அடையாளமாக மதுரை விளங்குகிறது இந்த மண்ணில் தமிழகம் மீட்போம் என்ற மாபெரும் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றனர் ஆற்றல் மிகுந்த செயல்வீரர்கள் பி. மூர்த்தி, தளபதி, மணிமாறன் ஆகிய மூவருக்கும் என்னுடைய நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கின்றேன் மூவேந்தர்களுக்கு என் நன்றி என்று தெரிவித்திருக்கின்றார் ஸ்டாலின்.

கோட்டையை மீட்கும் ஜனநாயகப் போர்தான் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல். தமிழ் நாட்டின் மானம் காக்க அனைவரும் மருதுபாண்டியர்களாக , எழுந்து வாருங்கள் கண்ணகியாக, எழுந்து வாருங்கள் என்று தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார் ஸ்டாலின்.