கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்! வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!

0
146

தமிழக அரசிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை செய்வதில் கருணாநிதியையே மிஞ்சி விட்டார் ஸ்டாலின் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார். எம்.ஜி.ஆரின் 33 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மதுரையில், அன்னதான நிகழ்ச்சி நடந்தது. அதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று அன்னதான நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆயிரம் தலைவர்கள் வாழ்ந்தாலும் மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் நீங்காது வாழ்ந்து கொண்டிருப்பவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கருணாநிதியை அழித்து பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை நிலைநாட்டுவதற்காக, அதிமுகவை தொடங்கினார் எம்.ஜி.ஆர் ஆனாலும் திமுகவின் தலைவர் கருணாநிதியை இப்போது அவருடைய குடும்பத்தில் இருப்பவர்கள் கூட நினைத்துப் பார்த்தது கிடையாது. இப்போது நடைபெற்று வரும் திமுக கூட்டங்களில், ஸ்டாலினுடைய புகைப்படமும், அவருடைய மகன் உதயநிதி புகைப்படம் தான் அதிக அளவில் இருக்கின்றது. தொடர்ச்சியாக திமுகவின் தலைவர் ஸ்டாலின் அரசிற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார். ஆனால் அதை மக்கள் யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை.

ஸ்டாலினுடைய பொய்யான பிரச்சாரங்களை முறியடித்து, அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்பதில் எந்த வித எதிர் கருத்தும் கிடையாது. ஒரு வகையிலே, பொய் பிரச்சாரம் செய்வதில் கருணாநிதியையே மிஞ்சி விட்டார் திமுகவின் தலைவர் ஸ்டாலின். அந்த கட்சிக்கு கொள்கையே இல்லை. பொய் பிரச்சாரம் ஒன்றை மட்டுமே தங்களுடைய மூளையாக வைத்து பதவி வெறி பிடித்து திரிகிறார்கள் அந்த கட்சியினர். மக்களை வேண்டுமென்றே குழப்பி வருகிறார்கள். இதற்கெல்லாம் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நீங்களே தீர்ப்பு கொடுக்கவேண்டும். எதிர் வரும் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் திமுக அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடவே கூடாது. அந்த அளவிற்கு மதுரையில் இருக்கின்றார் 10 தொகுதிகளிலும் திமுகவை டெபாசிட் வாங்க விடாமல் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Previous articleபொங்கல் பரிசு தொகை! டோக்கன் வினியோகம் தொடங்கியது!
Next articleவீட்டிற்கு விரைந்த அமைச்சர்கள்! கெத்து காட்டிய விஜயகாந்த்!