DMDK DMK: தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அடுத்த மாதம் வெளியாகுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது இருக்கும் சூழலில் எந்த ஒரு கட்சியும் தனித்து நின்று வெற்றி பெறுவது கடினம். அதனால் திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மூன்றாம் நிலை கட்சிகளான பாமக, தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தான் தேமுதிக, திமுக கூட்டணியில் சேர சம்மதம் தெரிவித்து விட்டதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடந்த தேமுதிக மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பதாக கூறியிருந்த பிரேமலதா, இதுவரை யாரும் கூட்டணியை அறிவிக்காத போது, நாங்கள் மட்டும் ஏன் அவசர படவேண்டும் என கூறி, பொங்கலுக்கு பிறகு கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறி அதிருப்தியை ஏற்படுத்தினார்.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தேமுதிக, அதிமுக, திமுக, தவெக என மூன்று பக்கமும் கதவை திறந்து வைத்திருந்தது. மேலும் பிரேமலதா மேற்கொண்ட பிரச்சாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பிரேமலதாவை சந்தித்து பேசியதால் அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதியாகும் என்று எண்ணப்பட்டது. ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் ராஜ்யசபா சீட் தராத விவகாரத்தில் தேமுதிக இபிஎஸ் மீது கடும் கோபத்தில் இருந்தது. அதோடு பிரேமலதா அவரை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இதனால் இந்த கூட்டணி முடிவுக்கு வராது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் அதிக தொகுதிகளையும், ராஜ்யசபா சீட்டையும் ஒதுக்குபவர்களுடன் தான் கூட்டணி என்று பிரேமலதா கூறியதால், விஜயுடன் கூட்டணி இல்லையென்பதும் தெளிவானது.
இதனை பயன்படுத்தி கொண்ட திமுக,தேமுதிகவை தன் பக்கம் இழுக்க முயற்சிதுள்ளது. இதற்காக திமுகவின் டாப் தலை ஒருவரை பிரேமலதாவிடம் பேச அனுப்பியதாக தகவல் கசிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், ஒரு ராஜ்யசபா சீட்டும், இரட்டை இலக்க தொகுதிகளும் ஒதுக்குவதாக கூறியுள்ளதால் தேமுதிக, திமுக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து விட்டது என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது திமுக கூட்டணி மட்டுமே பலமாக உள்ளதாலும், இந்த முறையும் திமுக தான் வெற்றி பெரும் என்று சில கருத்து கணிப்புகள் கூறுவதாலும் பிரேமலதா இந்த கூட்டணிக்கு தலையசைத்து இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.