“வேலை இல்லாமல் கருத்து சொல்கிறார் “- ராமதாஸ் குறித்து ஸ்டாலின் பதிவு- தமிழிசை கண்டனம்!!

Photo of author

By Sakthi

Tamilisai Soundrarajan: அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டில் தமிழக மின்வாரியம் உள்ளது. என ராமதாஸ் கருத்துக்கு எதிராக ஸ்டாலின் பதிவு வெளியிட்டு இருந்தார். அதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார் தமிழிசை சவுந்திரராஜன்.

இந்திய மாநிலங்களின் மின் வாரியத்திற்கு  சூரிய சந்தி மூலம் மின்சாரம் வழங்க அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்களிடம்  நிதி திரட்டி இருக்கிறார் அதானி. அதற்காக  அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்தது நிரூபணம் ஆன பின் ஊழல் வழக்கில் அதானியை கைது செய்ய அமெரிக்க அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும் இந்தியாவில் 20 வது நிறுவனங்கள் அதானி குழுமத்துடன் ஊழல் தொடர்புடையதாக  அறிவித்து இருந்தது  அமெரிக்க நீதிமன்றம்.

இதில் தமிழக மின் வாரியத்தின் பெயர் இடம் பெற்று இருக்கிறது. இதனை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதனை எதிர்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின், “டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார் ஸ்டாலின்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ்  கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் பாஜக மூத்த தலைவர்  தமிழிசை சவுந்திரராஜன் ஸ்டாலின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எதிர் கட்சியாக இருந்த போது வேலை இல்லாமல் மக்களுக்காக கருத்து தெரிவித்தீர்களா என்று கேள்வி எழுப்பி  இருக்கிறார். மேலும்  ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார்.