DMK: தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலுக்காக விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்காக முதலில் தனது கூட்டணியை பலப்படுத்தி வரும் திமுக தலைமைக்கு ஜாக்பாட் அடித்ததை போல புதிய கட்சி ஒன்று இணைந்துள்ளது. ஜான்பாண்டியனின் தமமுக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திமுக அமைச்சர் ராஜகருப்பன் கூறியுள்ளார். திமுக உடன் தேசிய கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக மற்றும் இன்னும் சில சிறிய கட்சிகள் பல ஆண்டுகளாகவே அங்கம் வகித்து வருவதால் மற்ற கட்சிகளை காட்டிலும் திமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது.
தற்போது அதிமுக பலமிழந்து காணப்படுவதால் இதனை பயன்படுத்தி கடந்த 10 தேர்தல்களிலும் திமுக வெற்றியடைந்து வருகிறது. மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளில் இம்முறை வெற்றி பெற அங்கு முக்கிய அமைச்சர்களை நியமித்துள்ளது. அது மட்டுமல்லாமல், நான்கரை ஆண்டுகளில் திமுக செயல்படுத்திய திட்டங்களை மக்களுக்கு நினைவுப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்சிகளையும் நடத்தி வருகிறது. மேலும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகளவு வாக்குறுதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
இவ்வாறு பல்வேறு முயற்சிகளை செய்து வரும் திமுகவிற்கு விஜய்யின் அரசியல் வருகை அதிருப்தியை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து, திமுக தான் தமது அரசியல் எதிரி என்று கூறியதோடு, திமுகவின் கூட்டணி கட்சிகளை தவெக பக்கம் இழுக்க முயற்சித்தார். ஆனால் தற்போது வரை அது ஈடேறவில்லை. இப்படி தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுகவிற்கு பல்வேறு பிரச்சனைகள் நெருங்கி வரும் வேளையில் தமமுக கட்சி திமுகவில் இணைவது அதற்கு பலத்தை கூட்டும் வகையில் அமைந்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.