ஸ்டாலினின் முதல்வர் கனவில் மண்ணள்ளிப்போட்ட திமுக நிர்வாகி…! அப்செட்டில் திமுக தலைமை…!

0
137

சட்டசபை தேர்தாலே இன்னும் நடைபெறவில்லை ஆனால் அதற்குள்ளாக ஆட்சிக்கு வந்துவிட்டது போல் கெத்து காட்டுகிறார்கள் ஒரு சில உடன் பிறப்புகள் 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாத திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அதிகாரத்தின் மோகத்தால் ஆர்வக்கோளாறில் அனைத்தையும் செய்து வருகிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.

சென்னை மத்திய மாவட்ட திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் சமீப காலத்தில் ஒரு பிரச்சனை காரணமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசியிருக்கிறார் அப்போது முடியுமா? அல்லது முடியாதா? என்று எடுத்த உடனேயே மாவட்ட ஆட்சியரிடம் அதிகார பாணியில் அவர் உரையாட மாவட்ட ஆட்சியர் பிரச்சனை சம்பந்தமான சிக்கல்களை எடுத்துச் சொல்லி இருக்கின்றார் அதை கொஞ்சம் கூட செவிகொடுத்து கேட்க அந்த திமுக பிரமுகர் உங்கள் நெறிமுறைகளை அனைத்தையும் குப்பை தொட்டியில் தூக்கி போடுங்கள் என்றும் அடுத்தது எங்கள் ஆட்சி தான் என்றும் தெரிவித்திருக்கிறார் காரியத்தை செய்து தரவில்லை என்றால் எங்கள் ஆட்சி வந்தவுடன் முதல் வேலையாக உங்களுக்குத்தான் டிரான்ஸ்பர் வரும் என்று தெரிவித்திருக்கிறார் இதேபோல தமிழகத்தில் பல இடங்களில் பல அதிகாரிகளை திமுகவினர் மிரட்டுவது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றது இதுபற்றி திமுகவினரிடம் கேட்டால் பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்து வருகிறோம் அதுவும் ஸ்டாலின் தலைவரான பிறகு கட்சி நிகழ்ச்சிகளை அனேக இடங்களில் நடத்தி வருகின்றோம் ஆனால் இது போன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் கட்சித் தலைமை ஒரு ரூபாய்கூட தருவதில்லை.

எங்களிடம் இருக்கும் பணத்தையெல்லாம் செலவு செய்துவிட்டு நாங்கள்தான் எதுவும் இல்லாமல் நிற்கின்றோம் ஆட்சிக்கு வந்தால் செலவு செய்த பணத்தை எடுத்து தானே ஆகவேண்டும் அதில் என்ன தவறு இருக்கிறது என்கிறார்கள் திமுகவின் உடன்பிறப்புகள் அவர்களின் இந்த தீரா பசி சம்பந்தமாக கட்சி சாராத நடுநிலையாளர்கள் ஒரு சிலரிடம் கேள்வி எழுப்பியபோது அவர்களுக்கு எதிரி வேறெங்கும் இல்லை அந்த கட்சியிலேயே தான் இருக்கிறார்கள் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சிக்கு வருமா என்பதே தெரியாது ஆனால் அக்கட்சியினர் இப்போதே ஆட்சியை பிடித்து விட்டது போல் பேசுகிறார்கள் இதையெல்லாம் பார்க்கும்போது கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் தான் நினைவுக்கு வருகிறது.

எதிர்வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் மீண்டும் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை என்னென்ன சம்பவங்கள் நடந்ததோ எதை எதையெல்லாம் மக்கள் எதிர் கொண்டார்களோ அவை அனைத்தும் மறுபடியும் நடப்பதற்கான சூழ்நிலை உருவாகும் மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் திமுகவினர் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டுக் கொள்ளும் காரியத்தை செய்து வருகிறார்கள் என்று சொல்கிறார்கள்.

Previous articleஉரிமையாளரிடமே திருடிய ஆட்டை விற்க முயன்ற திருடன் !!
Next articleஇனியாவது மத்திய அரசு தன் பிடிவாதத்தை கைவிடுமா…! ஸ்டாலின் கேள்வி…!