7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒரு சட்ட மசோதா சட்டப் பேரவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது அந்த சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார் சட்ட மசோதாவானது நிறைவேற்றப்பட்டு ஒரு மாத காலத்திற்கு மேலாக ஆகியும் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப் படாமல் இருப்பதால் இந்த வருடம் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு இருக்குமா இருக்காதா என்று கேள்வி எழுந்து இருக்கின்றது.
எனவே இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் கொடுக்கும் வரை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறாது என்று தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது இதற்கிடையே இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க மூன்று வாரம் முதல் 4 வார காலம் அவகாசம் தேவைப்படும் என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது இந்நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கூறி கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகை முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
கே என் நேரு பொன்முடி கனிமொழி டி ஆர் பாலு மா சுப்பிரமணியன் உள்ளிட்ட பால திமுக முக்கிய நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.