உயரும் பாமகவின் செல்வாக்கு! சகித்து கொள்ள முடியாமல் ஸ்டாலின் செய்த சித்து விளையாட்டு

Photo of author

By Sakthi

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கடந்த சில மாதமாக போராட்டங்கள் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தமிழக அரசின் சார்பாக பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. ஆனாலும் பாட்டாளி மக்கள் கட்சி தங்களுடைய நிலையில் இருந்து இறங்கி வருவதற்கு தயாராக இல்லை.

அந்த அளவிற்கு வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டில் அந்தக் கட்சி உறுதியுடன் இருந்தது. இருந்தாலும் ஆளும் கட்சியின் விடாமுயற்சியின் காரணமாகவும், தொடர் பேச்சுவார்த்தை காரணமாகவும், இந்த இட ஒதுக்கீடு பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது.

நேற்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வன்னியர்களுக்கு கல்வி, மற்றும் வேலைவாய்ப்பில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு பாட்டாளி மக்கள் கட்சிக்கு உறுதியளித்ததை தொடர்ந்து ,ஒரு சுமுகமான முடிவு ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அறிவித்து விடுகிறோம் பின்பு ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அறிவிப்பு சட்டம் ஆக்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக உறுதியளிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் பாட்டாளி மக்கள் கட்சியும் சற்றே இறங்கி வந்து தங்களுடைய போராட்டத்தை தளர்த்தி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் தற்சமயம் இதில் குட்டையை குழப்பி வருகிறார்.

அவர் தெரிவித்திருப்பதாவது பாமக ஓட்டுக்காக மட்டுமே இந்த இட ஒதுக்கீடு போராட்டம் நடத்துகிறது என்று தெரிவித்திருக்கிறார் அதோடு நான் ஸ்டாலினிடம் இது தொடர்பான கோரிக்கையை வைத்திருக்கிறேன் அவர் ஆட்சிக்கு வந்தால் இதனை உடனடியாக நிறைவேற்றுவேன் என்று தெரிவித்திருக்கிறார். அப்படியிருக்கையில் இவர்கள் ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என்பது போன்ற ரீதியில் பேசி இருக்கிறார்.

இதற்கு தமிழகம் முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்திருக்கின்றன .ஆரம்ப காலத்திலிருந்தே வன்னியர்களின் உரிமைக்காக போராடி வருபவர் மருத்துவர் அய்யா ராமதாஸ், அவர்களும் வன்னியர் சங்கமும் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு அவர்களும், இது தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் அறிந்ததுதான்.

தேர்தல் சமயத்தில் மட்டும் இல்லை வன்னியர்களுக்கு எந்த சமயத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் முதல் ஆளாக நீதிகேட்டு நிற்பது பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்கமும் அதன் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும் தான் என்பது ஊரறிந்த உண்மை.

இப்படி இருக்கையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அந்த அப்பழுக்கற்ற மாமனிதர் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டை வைத்திருப்பது தமிழகம் முழுவதிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சாதாரண தினங்களில் எல்லாம் இவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாது ஆனால் தேர்தல் சமயம் வந்து விட்டால் மட்டும் எங்கிருந்தோ வந்துவிடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் சமயத்தில் இவர் செய்யும் சித்து விளையாட்டுக்கள் அனைத்தும் பாமகவிற்கும், வன்னியர் சங்கத்திற்கும் எதிரானதாகவே இருக்கும். அதோடு இவர் எதிர்க் கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் கைப்பாவை என்பதும் ஊரறிந்த விஷயம்தான்.

தமிழக மக்களுக்கும் வன்னிய மக்களுக்கும் எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் இவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாது. ஆனால் இந்த தேர்தல் சமயத்தில் மட்டும் வெளியே தலையை நீட்டும் வேல்முருகன் எதற்காக இப்படி செய்கிறார் என்று எத்தனை பேருக்கு தெரியும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இவர் தலைமையில் வன்னியர் சங்கம் என்ற ஒரு அமைப்பு இருந்தது. அந்த அமைப்பு தற்போது இருக்கிறதா இல்லையா என்ற எந்த ஒரு தகவலும் இல்லை. அதேபோல எதிர் வரும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இப்படி ஒரு விளையாட்டை இவர் மூலமாக ஸ்டாலின் நடத்துகிறார் என்று தமிழகம் முழுவதும் பரவலாக ஒரு பேச்சு எழுந்திருக்கிறது.

ஆம் வன்னியர்களின் தனி இட ஒதுக்கீட்டிற்கு அனுமதி கொடுக்கப்படும் என்று அதிமுக தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கான காரணம் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதாலும் நடுநடுங்கிப் போய் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதன் காரணமாக தான் வேல்முருகனை வைத்து அவர் இவ்வாறு ஒரு ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. எத்தனை பேரை வைத்து எப்படி பிரச்சாரம் செய்தாலும் பாட்டாளி மக்கள் கட்சியை ஒரு காலத்திலும் அசைத்துப் பார்க்க கூட இயலாது என்பது தன்னை கலைஞர் மகன் என்று தெரிவித்துக் கொள்ளும் ஸ்டாலின் அவர்களுக்கு ஏனோ தெரியவில்லை.

வேல்முருகன், திருமாவளவன் ,வீரமணி போன்ற ஒருசில நபர்களை கையில் வைத்துக்கொண்டு அவ்வப்போது தேவை என்ற இடத்தில் ஒரு சில கலவரங்களை ஏற்படுத்தி திமுக தன்னுடைய அரசியல் செல்வாக்கை அவ்வப்போது நிலைநிறுத்தி வருகிறது என்பது தற்சமயம் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. ஆனால் அதையும் ஸ்டாலின் அவர்கள் இதுவரையில் அறியவில்லை எதிர்காலத்தில் அவர் விதைத்த இந்த வினை அவரையே போய் சேரும் என்றும் ஒரு சிலர் தெரிவிக்கிறார்கள்.